பொருளாதார புத்தெழுச்சிக்கு பங்களிக்குமாறு வங்கித்துறையினரிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

Published By: Digital Desk 3

15 May, 2020 | 03:59 PM
image

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் பலமாக கட்டியெழுப்புவதற்காக பாரம்பரிய சிந்தனைகள் மற்றும் கட்டமைப்பில் இருந்து விலகி பங்களிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வங்கித் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க அரசாங்கத்திற்கு முடியுமாக இருந்தது. தற்போதுள்ள பாரிய சவால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகும். ஆடை கைத்தொழிலை வழமை நிலைக்கு கொண்டுவர நீண்ட காலம் செல்லும்.

சுற்றுலா துறையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இழந்த வருமானம் மற்றும் தொழில்கள் மிகவும் பெரியதாகும். பழைய இறக்குமதி முறைமையை தொடரந்தும் முன்னெடுக்க முடியாது. நாம் உற்பத்தி பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக செயல்திறமாக பங்களிப்பதற்கு வங்கித் துறையினருக்கு முடியும்' என்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கு பிந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டத்திற்கு வங்கித் துறையை பங்குதாரராக்கிக் கொள்ளுதல் மற்றும் அதன்போது வங்கித் துறையில் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நேற்று (14.05.2020) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி  இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு.டீ. லக்ஷ்மன் உட்பட பிரதி ஆளுநர்கள், அரச மற்றும் தனியார் துறை வங்கித் தலைவர்கள் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கொரோனா பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு சுகாதாரத் துறை உட்பட அனைத்து தரப்பினரும் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி  வங்கித் துறையிடமும் அத்தகைய பங்களிப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

தற்போதுள்ள முக்கிய தேவை உற்பத்தி பொருளாதாரத்தை பலப்படுத்துவதாகும். இதற்காக முதலிடக்கூடிய பல துறைகள் உள்ளன. தேயிலை உட்பட பெருந்தோட்ட கைத்தொழில், சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகள், வீடுகள் மற்றும் ஏனைய நிர்மாணத் துறை, விவசாயத்துடன் தொடர்புடைய உற்பத்திகள் பெறுமதி சேர்க்கப்பட்ட கறுவா, மிளகு போன்ற பயிர்கள் அவற்றில் சிலவாகும். இத்துறைகளில் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்காக இலகுவான நிபந்தனைகளின் கீழ் கடன் வழங்குமாறு ஜனாதிபதி  வங்கிச் சமூகத்திடம் கேட்டுக்கொண்டார்.

'வாகனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற இறக்குமதிக்காக கடன் வழங்கி இலகுவாக இலாபமீட்டும் முறைமையை தொடர்ந்தும் பேண முடியாது.

புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னுரிமைகளுக்கே அதிகம் கடன் வழங்கப்பட வேண்டும். விவசாயிகள் அதிக வட்டிக்கு வியாபாரிகளிடம் கடன் பெறுகின்ற போது அவர்கள் வியாபாரிகளினால் சுரண்டப்படும் நிலைக்கு ஆளாகின்றனர்.

அது எல்லா வகையிலும் பாதிப்பானதாகும். பெரிய வியாபாரிகளுக்கு போன்றே சிறிய வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் வங்கிகள் உதவ வேண்டும்.' என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், கடன் வழங்கியதன் பின்னர் அதன் மூலம் பயன்பெறும் விதம் குறித்து தொடர்ந்தும் தேடிப்பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் வங்கிகளில் இருந்து கடன்பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதவர்களில் அதிகமானவர்கள் ஏழைகளன்றி பணக்காரர்களேயாகும் என்றும் குறிப்பிட்டார்.

மத்தியதர வர்க்கத்தினருக்காக வீடுகளை நிர்மாணித்து சலுகை விலையில் அவற்றை வழங்குவதற்கு தனது கொள்கை பிரகடனத்தில் உறுதியளித்ததை நினைவுகூர்ந்த ஜனாதிபதி  அத்தகைய சந்தர்ப்பங்களில் மத்தியதர வர்க்கத்தினருக்கு குறைந்த வட்டிக்கு கடன் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கலந்துரையாடலில் பங்குபற்றிய வங்கிப் பிரதிநிதிகள் பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பிட்டனர்.

அவர்கள் வங்கித் துறை முகம்கொடுத்துள்ள சில பிரச்சினைகளையும் முன்வைத்ததுடன், மத்திய வங்கியுடன் கலந்துரையாடி அவற்றை தீர்த்துக்கொள்ளவும் இணக்கம் தெரிவித்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24