வீரர்களின் ஆரோக்கியமே முக்கியம் : பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவிப்பு

15 May, 2020 | 03:07 PM
image

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடர் குறித்து உடனடியாக முடிவு எடுக்க மாட்டோம் என பாகிஸ்தான கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை  விளையாட்டு போட்டிகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை  தீர்மானித்துள்ளது.

பாகிஸ்தான் அணி ஜூலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று டெஸ்ட் மற்றும்மூன்று சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையில் பிரதம நிறைவேற்று அதிகாரி வசிம் கான் கூறுகையில்,

‘‘வீரர்கள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.

தற்போது இங்கிலாந்தில் மோசமான நிலை நிலவுகிறது. அவர்களுடைய திட்டம் குறித்து நாங்கள் கேட்டுள்ளோம். நாங்கள் எந்தவொரு முடிவையும் எடுக்க மாட்டோம். ஆனால், அடுத்த மூன்று அல்லது நான்கு வாரங்களில் மதிப்பீடு செய்து முடிவு எடுப்போம்’’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35