பணயக் கைதியாக வைத்து அரசியல் செய்ய இடமளிக்கப்போவதில்லை

Published By: Robert

28 Jun, 2016 | 09:27 AM
image

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­மையை பண­யக்­கை­தி­யாக வைத்து இனி­மேலும் அர­சியல் செய்ய இட­ம­ளிக்கப் போவ­தில்லை என முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி வித்தார்.

காத்­தான்­குடி அன்வர் வித்­தி­யா­ல­யத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை நடை­பெற்ற இப்தார் வைப­வத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

முஸ்லிம் காங்­கி­ரஸின் தேசிய கொள்கை பரப்புச் செய­லாளர் யு.எல்.எம்.என்.முபீன் தலை­மையில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பினர் அலி சாஹீர் மௌலா­னாவின் அனு­ச­ர­ணையில் நடை­பெற்ற இந்த இப்தார் நிகழ்­வில் ­தொ­டர்ந்­து­ரை­யாற்­றிய அமைச்சர் முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மையை அவ­மா­னப்­ப­டுத்­து­வ­தற்கும் மான­பங்­கப்­ப­டுத்­து­வ­தற்கும் கடந்த காலங்­களில் அதை அடிப்­ப­டை­யாக வைத்து தங்­க­ளு­டைய பத­வி­க­ளுக்­காக பேரம் பேசி­ய­வர்கள் இனி­மேலும் இந்தக் கட்­சியின் தலை­மையை பணயக் கைதி­யாக வைத்து அர­சியல் செய்ய முடி­யாது என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்றேன் என்­பதை மிகவும் தெளிவாக கூறி வைக்­க­ வி­ரும்­பு­கின்றேன்.

யாரையும் இந்தக் கட்­சி­யி­லி­ருந்து வெளி யேற்றும் நோக்கம் கட்­சிக்கு கிடை­யாது.

எமது முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி எடுத்த தீர்­மா­னங்கள் எதுவும் கட்­சி­யி­னு­டைய அர­சியல் யாப்பின் படி எங்­க­ளு­டைய பேரா ளர் மாநாட்­டி­லே தான் மாற்­றப்­பட முடியும்.

அதை தவி­ர­வும் எந்த மாற்­றமும் செய்­யப்­ப­ட­மாட்­டாது என்­பதை மிகத்தெளி­வாக நான் சொல்­லி­யா­க­ வேண்டும்.

அதே நேரம் கட்சி தலைமை இந்த விட­யங்­க­ளிலே உறு­தி­யாக இருக்­கின்­றது என்­ப­தையும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

கட்­சிக்குள் இருந்து எந்­தப் ­போ­ராட்­ட­த் தையும் செய்­யுங்கள். ஆனாலும் நல்ல நோக்­கத்­திற்­காக எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்கள் எது­வுமே மாற்­றப்­பட முடி­யாது.

பதவி நோக்­கத்­திலே யாருமே இந்­தக்­கட்­சியை அடகு வைத்து பிழைப்­ப­தற்கு இனி­மேலும் நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்.

இன்று இந்த நாட்டு அர­சி­யலில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்­ன­ணியில் சிறு­பான்மை சமூ­கங்­களின் அர­சியல் தலை­மை­களில் மூன்று பிரி­வி­ன­ராக இருக்­கின்ற தமிழ் மக்­களின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரும், முஸ்­லிம்­க­ளு­டைய அர­சியல் தலை­மைகள் என்­ற­ வ­கையில் முஸ்லிம் காங்­கி­ர­ஸா­கிய நாங்­களும், அதே போன்று மலை­யக தலை­மை­களும், ஒரு நிம்­மதிப் பெரு­மூச்சு விடு­கின்ற கால­கட்­டத்தில் இருக்­கின்றோம்.

அக்­கி­ர­ம­மான ஒரு ஆட்­சிக்­கா­லத்தை முடி­வுக்கு கொண்டு வந்து இந்த நாட்டை சுபீட்­சத்­துக்கு கொண்டு வந்­தது மாத்­தி­ர­மல்ல இனங்­க­ளுக்­கி­டை­யிலே நல்­லி­ணக்­கத்தை இத­ய­பூர்­வ­மாக ஏற்­ப­டுத்­து­கின்ற நல்ல முயற்­சியில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருக்­கின்ற ஒரு சூழலில் ஆளுக்கு ஆள் தர்க்­கித்துக் கொள்­கின்ற ஒரு சூழலை எங்­க­ளுக்­குள்ளே உரு­வாக்கி விடாமல் பாது­காக்க வேண்டும்.

நல்­லெண்ண முயற்­சிகள் மேற்கொள்­ளப்­பட்டு வரும் பின்­ன­ணியில் இன்னும் குழப்ப சூழலை உரு­வாக்­கு­வ­தி­லி­ருந்து தவிர்த்து கொள்­ளாமல் விதம் வித­மான போர்­வை­க­ளிலே குழப்ப சூழலை ஏற்­ப­டுத்த முற்­ப­டு­கின்­றனர்.

சில நல்­லெண்ண நட­வ­டிக்­கைகள் மேற் கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவற்றில் நல்ல ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுக்கான அறிவிப்புக்கள் அடுத்தவாரம் வரவிருகின்றது என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56