அர­சி­ய­ல­­மைப்பு குறித்த அடிப்­படை நகல் இது­வ­ரை தயா­ரிக்­கப்­­ப­ட­வில்­லை

Published By: Robert

28 Jun, 2016 | 09:24 AM
image

பௌத்த தர்மம் தொடர்பில் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்­பி­லுள்ள எந்­தவோர் சரத்தும் திருத்­தப்­ப­டவோ அல்­லது மாற்­றப்­ப­டவோ மாட்­டாது. இது தொடர்பில் வெளியாகும் செய்­தி­களில் எது­வித உண்­மை­யு­மில்லை என பிர­தமர் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான நகலோ அல்­லது அதன் அடிப்­ப­டை­யி­லான எழுத்து மூல­மான விட­யங்­களோ இது­வ­ரையில் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை என்றும் பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒவ்­வொரு விதத்­தி­லான சரத்­துக்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளியாகும் செய்­தி­களை மறுத்­துள்ள பிர­தமர் அலு­வ­லகம் அது தொடர்­பாக விளக்­க­ம­ளித்து நேற்று திங்­கட்­கி­ழமை விசேட அறிக்­கை­யொன்றை வெளியிட்­டது. அவ் அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக சமூ­கத்­திற்குள் பல்­வே­று­பட்ட தவ­றான கருத்­துக்­களை பரப்பும் அமைப்பு ரீதி­யான இயக்­கங்கள் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. இது தொடர்பில் எமது கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான நகலோ அல்­லது அதன் அடிப்­ப­டை­யி­லான எழுத்து மூல­மான விட­ய­மொன்றோ இது­வ­ரையில் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பில் ஒவ்­வொரு விதத்­தி­லான சரத்­துக்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளியி­டப்­படும் தக­வல்­களில் எந்­த­வி­த­மான அடிப்­படை உண்­மையும் கிடை­யாது.

விசே­ட­மாக பௌத்த தர்மம் தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள சரத்­துக்­களில் திருத்­தங்­களை மேற் ­கொள்­ளவோ அல்­லது மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவோ எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அவ்­வாறு வெளி வரும் தக­வல்­களில் உண்­மை­யு­மில்லை.

" தேர­வாத " பௌத்த தர்­மத்தை பாது­காத்து போஷிப்­ப­தற்­கான பொறுப்பை அர­சாங்கம் எப்­போதும் கடைப்­பி­டிக்கும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவால் இது­வ­ரையில் தேர்தல் முறைமை, மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்­களை பர­வ­லாக்­குதல் தொடர்­பான பட்­டியல் மற்றும் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை தொடர்­பி­லான விட­யங்­களே கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன.

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக மக்­களின் கருத்­துக்கள் கேட்­ட­றி­யப்­பட்­டன. இதன்­மூலம் அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்­கும்­போது மக்­களின் கருத்­து­க்க­ளுக்கு பிர­தி­நி­தித்­து­வத்தை பெற்றுக் கொடுப்­பதே நோக்­க­மாகும்.

இவ் விட­யத்­தில் மக்கள் தமது மன விருப்­பப்­படி பல கருத்­துக்­களை முன்­வைத்­தனர். அவ்­வா­றான கருத்­துக்கள் தற்­போது பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதுவோர் அர­சி­ய­ல­மைப்பு நகல் அல்ல.

மக்கள் முன்­வைத்த கருத்­துக்கள் வெளிப்­படைத் தன்­மை­யாக இதன்­மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

இக் கருத்துக்கள் அரசியலமைப்பை தயாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற இணைக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும். அந்தந்த இணைக் குழுக்கள் எதிர்காலத்தின் நன்மை கருதி எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் கருத்துக்களை புதி­ய அரசியலமைப்பின் தயாரிப்பின்போது கவனத்தில் எடுக்கும் என அவ்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11