தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை !

Published By: Priyatharshan

15 May, 2020 | 11:35 AM
image

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. பொதுவாக தேர்தல் காலங்களில் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை அரசியல்வாதிகள் கையில் எடுப்பதும், தேர்தல் முடிந்த கையோடு கை விடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் வருடக்கணக்கில் தமது விடுதலையை எதிர்நோக்கி சிறைச்சாலைகளில் காத்துக்கிடக்கின்றனர். இதனால் இவர்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது.

 

சந்தேகத்தின் பேரில் தங்கள் சிறு பராயத்தில் கைதான பலர்,  ஆண்டுகள் பல கடந்த நிலையிலும் முதுமையை அடைந்தும் கூட, விடுதலை இன்றி பாடுபடுகின்றனர்.

தங்கள் விடுதலை தொடர்பில் பல தடவைகள் இவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் கூட எந்தவிதமான பலனும் கிட்டவில்லை.

அவ்வப்போது உறுதிமொழிகள் வழங்கப்பட்டனவே தவிர, பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. யுத்தம் நிலவிய காலத்தில் புலிகளுக்கு உதவினார்கள், உணவு அளித்தார்கள் என்ற சந்தேகங்ளிலும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலும் கைதான பலர் விசாரணையின்றி சிறைகளில் வாடுகின்றனர்.

இவர்களை நம்பி வாழும் பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்தும் கண்ணீர் சிந்திய நிலையிலேயே காணப்படுகின்றனர்.

யுத்த காலத்தில் நேரடியாக ஈடுபட்ட பலர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டு, அவர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக சமூகத்தில் வாழ்ந்து வரும் நிலையில், குறித்த அரசியல் கைதிகளையும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முன்வந்தால் அது பெரும் வரவேற்பைப் பெறும்,

இதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமருடனான சந்திப்பை அடுத்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலில் உள்ள 47 பேரை பொது மன்னிப்பில் மாத்திரமே விடுதலை செய்ய இயலும் என்றும் அது குறித்து விரைவில் பேச உள்ளதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய  நபர்களைக் கூட ஜனாதிபதி பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளார்.

அந்த வகையில் அறியாத பருவத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து, தொடர்ந்தும் சிறையில் வாடும் குறித்த தமிழ் அரசியல் கைதிகளை, விடுதலை செய்வது ஜனாதிபதியின் தார்மீக சிந்தனையிலேயே தங்கியுள்ளது, என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04