சுந்தர் பிச்சையின் குவோரா கணக்கை ஹேக் செய்த அவர்மைன் குழு

Published By: Raam

28 Jun, 2016 | 09:56 AM
image

இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மேம்பாடு மற்றும் நவீனத்துவம் அதிகரித்து வரும் இந்த யுகத்தில், கடவுச்சொல் (password)இல்லாமலேயே ஊடுருவும் இணையதள திருடர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக பிரபலங்களின் வலைத்தளங்களே இவர்களின் இலக்காக இருக்கிறது.

பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க்கின் டுவிட்டர் மற்றும் பின்டரஸ்ட் (pinterest) கணக்குகளை அவர்மைன் (OurMine) என்ற ஹேக்கர் குழு முடக்கியது. 

அதே குழு தற்போது கூகுள் (Google ) தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையின் (Sundar Pichai) குவோரா (Quora) கணக்கினுள் ஊடுருவி செய்திகளை பதிவு செய்துள்ளது. 

அவரது குவேரா (Quora) பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த டுவிட்டு, அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இருப்பதைப்போன்றே தெரிந்தது. இதன்மூலம் அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. 

பின்னர் அந்த கணக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, அதில் உள்ள டுவிட்டுகள் சில மணி நேரத்தில் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த ஹேக்கர் குழு தாம், சுந்தர் பிச்சையின் டுவிட்டர் மற்றும் குவோரா (Quora) கணக்கினுள் ஊடுருவியாதகவும் அவரின் கணக்குகளின் பாதுகாப்பு தன்மை மிகவும் குறைவாக உள்ளதாகவும் அவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47