5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க உத்தியோகபூர்வ வாக்காளர் பெயர் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Published By: J.G.Stephan

15 May, 2020 | 09:39 AM
image

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கு வேலைத்திட்டத்திற்கு உத்தியோகபூர்வ வாக்காளர் பெயர் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்விடயம் பற்றி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையத்தினால் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டள்ளது.



அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

உத்தியோகபூர்வ வாக்காளர் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி பாவித்தமை மற்றும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச வளங்களை தவறாக பயன்படுத்துதல் தொடர்பில் இந்த கடித்தத்தினை அனுப்பி வைக்கின்றோம்.

எதிர்பாரா விதமாக பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் நாடளாவிய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது தேர்தல்கள் ஆணைக்குழு அறிந்தவொரு விடயமாகும்.

இதன் போது பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் விடயத்தில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் நிவாரணம் வழங்கப்படும் முறைமை என்பன பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் பல தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தினுள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் அவற்றை அரசியல் மயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமையே இதற்கான காரணமாகும்.

இதில் பிரதானமானது,  சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதாகும். சமூர்த்தி பணிப்பாளர் நாயகத்தினால் 5000 ரூபா கொடுப்பனவைப் பெறத் தகுதியானவர்கள் தொடர்பில் குறிப்பிட்டு மாவட்ட  அதிபர்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ள  சுற்று நிரூபத்தில் 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் சமூர்த்தி வங்கிகளுக்கூடாக தெரிவு செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆணைக்குழு என்ன தீர்மானம் எடுத்துள்ளது என்பது எமக்கு புரியவில்லை. எனவே இது தொடர்பில் ஆணைக்குழு விளக்கமளிக்கும் என்று நம்புகின்றோம்.

இந்நிலையில் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் நாட்டிலுள்ள பெரும்பாலான சமூர்த்தி வங்கிகளிகள் மற்றும் அதிகாரிகள் இது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

அத்தோடு இவ்வாறு கொடுப்பனவு வழங்கும் சேவையிலிருந்து பல கிராம உத்தியோகத்தர்கள் இடை விலகியிருக்கும் நிலையில் வேட்பாளர் பெயர் பட்டியல் வெளிவேறு தரப்பினரால் உபயோகிக்கப்படுகின்றமை எமக்கு அதிர்ச்சியளிக்கிறது.

இது தொடர்பில் எமது அமைப்பினால் ஆழமாக ஆராயப்பட்டபோது சமூர்த்தி பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் கொழும்பில் ஏனைய அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இவ்விடயம் பற்றி பேசப்பட்டதாகவும் கலந்துரையாடலின் நிறைவில் வாக்காளர் பெயர் பட்டியலின் பிரதிகள் பெருமளவு வழங்கப்பட்டுள்ளமையும் உறுதியாகத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட பிரதிகள் குறித்த அதிகாரிகளால் மாவட்ட ரீதியிலான அரச ஊழியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாட்டுடன் இவ்வாறான பெயர் பட்டியலொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ள பெயர் பட்டியலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும். எவ்வாறிருப்பினும் இவ்வாறானதொரு அரச உத்தியோகபூர்வ ஆவண பிரதிகள்  வெளிவேறு திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை சட்ட பூர்வமானதல்ல.

எனவே இவ்விடயம் தொடர்பில் நாம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சில விடயங்களை வலியுறுத்த விரும்புகின்றோம். தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள இவ்வாறான உத்தியோகபூர்வ ஆவணத்தை பயன்படுத்துவதற்கு ஆணைக்குழு குறித்த கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளதா ? அவ்வாறில்லை என்றால் அந்த கட்சிக்கு எதிராக ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுக்கும் ?

இவ்வாறான ஆவணங்களை பயன்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் செயல் என்பது தெளிவாகின்றது. எனவே இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கை யாது ? ஆணைக்குழுவிலுள்ள ஒரு ஆவணம் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் முறையானதொரு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47