இலங்கை - இந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அதியுச்ச ஈடுபாட்டுடன் உள்ளோம் - புதிய இந்தியா உயர் ஸ்தானிகர் வீரகேசரிக்கு தெரிவிப்பு

Published By: Digital Desk 3

14 May, 2020 | 09:59 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொவிட்-19 வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒத்துழைப்பின் உள்ளுணர்வுகளை கொண்டுள்ளதுடன் இந்த நெருக்கடியினை இலங்கை எதிர்கொள்ள இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பினை வழங்கும். அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் அபிவிருத்தி செய்வதிலும் வலுவாக்குவதிலும்  அதி உச்ச  ஈடுபாட்டை கொண்டிருப்பதாக  இலங்கைக்கான இந்தியா உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே வீரகேசரிக்கு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில் , 

இணைய வழி ஊடாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் எனது நியமன சான்றிதழை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளித்தேன்.

பாரம்பரிய நடைமுறைகளுடனான இந்த நிகழ்வு இலங்கையில் முதன் முதலாக இணைய வழி ஊடாக இடம்பெற்றுள்ளது.

உலகளவிலும் இடம்பெற்ற முதலாவது சந்தர்ப்பமாகவும் இது அமையலாம். அதன் தொடர்ச்சியாக கட்சி வேறுபாடுகளின்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட  பல அரசியல்  தலைவர்களுடன் கலந்துரையாடினேன்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியது போன்று கொவிட்-19 வைரஸ் இன , மத , மொழி மற்றும் எல்லைகளை தாண்டி தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

எனவே எமது எதிர் நடவடிக்கைகள் ஒத்துழைப்பின் உள்ளுணர்வுகளை கொண்டுள்ளதுடன் இந்த நெருக்கடியினை இலங்கை எதிர்கொள்ள இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பினை வழங்கும். 

மேலும் இன்றைய இந்த சிறந்த முயற்சியானது இருநாடுகளுமிடையிலான நட்பு மற்றும் பன்முக உறவுகளின் அடிப்படையில் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன்  பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதில் இந்தியாவின் தொடர்ச்சியான ஈடுபாட்டினையும் இந்தியா எப்போதும் ஆர்வத்துடனேயே உள்ளது. 

இருநாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் அபிவிருத்தி செய்வதிலும் வலுவாக்குவதிலும்  இந்தியா அதி உச்ச  ஈடுபாட்டை  கொண்டுள்ளதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08