ராஜித நீர்கொழும்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் : வெளி நபர்கள் சந்திக்க அனுமதி இல்லை

Published By: Digital Desk 3

14 May, 2020 | 08:35 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

விளக்கமறியல் கைதியான  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீர்கொழும்பு - பல்லன்சேன, புனர்வாழ்வு மையத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில், மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. 

நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக, தற்போது விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடுவோரை பல்லன்சேன  சிறைச்சாலை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதன் பின்னனியிலேயே ராஜித சேனாரத்னவையும் அங்கு அழைத்து சென்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி தென்னகோன் தெரிவித்தார்.

வெள்ளை வேன் விவகாரம் குறித்த  ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன  கடந்த 2019 டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி  அனுமதித்த உத்தரவானது, தவறானது என கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று  தீர்மானித்த நிலையில், ராஜித சேனாரத்ன அன்றைய தினம் இரவு  கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சரணடைந்தார்.  இதனையடுத்து அவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனையடுத்து அங்கிருந்து கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு பதிவுகள் முடிந்ததும் நேரடியாக பல்லன்சேன தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு ராஜித சேனாரத்ன அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவரை சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதனை செய்துள்ள நிலையில், அவரை பல்லன்சேனை தனிமைப்படுத்தல் நிலையத்தின் மருத்துவ நிலையத்தில் தனிமைப்படுத்தி வைக்க வைத்தியர்கள் ஆலோசனை வழங்க்கியுள்ளனர்.

ஏற்கனவே  இருதய சத்திர சிகிச்சைக்கு ராஜித சேனாரத்ன உட்படுத்தப்பட்டுள்ளதால் அவர் வழமையாக பயன்படுத்தும் மருந்துகளை வீட்டிலிருந்து பெற்று பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ள போதும், அவரை பார்வை இட பிரமுகர்கள் உள்ளிட்ட எவரும் அனுமதிக்கப்படவில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47