மூட்டுவலிக்கு பக்கவிளைவுகளற்ற தீர்வு தரும் ஆயுர்வேதம்

Published By: Robert

28 Jun, 2016 | 08:53 AM
image

மூன்று தோஷங்கள், உப தோஷங்கள், தோஷங்­களின் ஆவ­ரணம், ஏழு தாது­களின் நிலை, ஓஜஸ் எனப்­படும் உயிர் சக்­தியின் நிலை, விக்­ருதி, பிரக்­ரு­திகள், பஞ்­ச­மா­பூ­தங்கள், தஷ நாடிகள், எந்த கண்டம் பாதிப்பு? எந்த உறுப்பு பாதிப்பு? கப வாத நாடியா? அசாத்ய நாடியா? சாத்ய நாடியா? நோயாளி செய்­கின்ற தவறு, நோயாளி உண்ட உணவின் தன்மை, நோயா­ளிக்கு மருந்து வேலை செய்­யுமா? மூன்று மலங்கள் மற்றும் கழிவு நீக்­கத்­தி­லுள்ள பாதிப்பு? ஆமம் பாதிப்பு, 13 ஸ்ரோக்ஸின் நிலை, தஷ­வா­யுக்­களில் ஏற்பட்ட பாதிப்பு, வர்ம பாதிப்பு, ஆஹாரம், தூக்கம், பிரம்­மச்­ச­ர்யம் என்ற மூன்று தூண்­களின் நிலைப்­பாடு, நோயின் ஆறு நிலை­களில் எந்த நிலையில் உள்­ளது? கரு தனித்­துள்­ளதா? அந்த கரு ஆணா அல்­லது பெண்ணா? குழந்தை உண்­டா­காமல் இருப்­பதன் காரணம்? பூத நாடியின் பாதிப்பு, குரு நாடி, மனத்தின் தன்மை என எண்­ணி­ல­டங்கா விட­யங்­களை ஒரு ஆயுர்­வேத மருத்­துவர், நோயா­ளி­யிடம் பேசிக் கொண்டே அவரின் நாடியை பற்­றிக்­கொண்டு துல்­லி­ய­மாக பரி­சோ­த­னையை செய்­து­வி­டு­வார்கள்.

இது ஆயுர்­வேத மருத்­து­வர்­களால் மட்­டுமே மேற்­கொள்­ளப்­படும் சிகிச்சை நட­வ­டிக்கை என்று உறு­தி­யாகச் சொல்­லலாம். கிளி­னிக்கல் டயாக்னைஸ் என்றும் இதனை குறிப்­பி­டலாம்.

இதற்­காக நீங்கள் அலோ­பதி மருத்­து­வத்­திற்கு சென்றால் அவர்கள் அனைத்து வித­மான பரி­சோ­த­னை­க­ளையும் செய்யச் சொல்­வார்கள். செலவு வைப்­பார்கள். இறு­தியில் கார­ண­ம­றியா சிக்கல் என்று ஒரு பெயரை சூட்டி, நோயெ­திர்ப்பு மருந்­து­களை வழங்கி உங்­களை. உங்­க­ளை­ய­றி­யா­ம­லேயே கண்­காணிக்கத் தொடங்­கு­வார்கள்.

ஆனால் ஆயுர்­வேதம் உட­லியல் சிக்­கல்­களை துல்­லி­ய­மாக கணித்து அதனை பக்­க­வி­ளைவு ஏது­மில்­லாமல் நிரந்­த­ர­மாக குணப்­ப­டுத்­து­கி­றது என்று ஆயுர்­வே­தத்தின் மகத்­து­வத்தை எளி­மை­யாக விளக்­கு­கிறார் டொக்டர் எஸ்.தன்­வந்­திரி பிரேம்வேல். இவர் மது­ரையில் மூன்று தலை­மு­றை­க­ளாக ஆயுர்­வேத மருத்­துவ சிகிச்­சையில் ஈடு­பட்டு வரும் பரம்­ப­ரையைச் சேர்ந்­தவர். அத்­துடன் தன்­வந்­திரி ஆயுர்­வேத வைத்­தி­ய­சாலை என்ற பெயரில் மது­ரையில் மட்­டு­மல்­லாமல் இந்­தி­யாவின் ஏனைய பகு­தி­க­ளிலும் கிளை­களை தொடங்கி அனைத்து மக்­க­ளுக்கும் மருத்­துவ சேவையை செய்து வரு­கிறார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இனி அவரின் விளக்­கத்தைக் காண்போம்.

மூட்டு, முழங்கால் வலி, பக்­க­வாதம், நரம்பு தொடர்­பா­ன­ நோய்கள், மூச்சுத் திணறல், ஸைனஸ், தொடர் தலை­வலி, ஆஸ்­துமா, நீரி­ழிவு, தலை இறுக்கம், கழுத்து வலி, சிறு­நீ­ரகக் கோளா­றுகள், மகப்­பேற்­றின்மை, சொரி­யாஸிஸ் உள்­ளிட்ட பல சரும நோய்கள் என அனைத்­து­வி­த­மான கோளா­று­க­ளுக்கும் ஆயுர்­வே­தத்தில் சிகிச்­சை­யுண்டு. இதற்­காக நாங்கள் பிழிச்சல், மருத்­துவ நீரா­விக்­கு­ளியல், நஸியம், தாரா, கிழி, நவரக் கிழி, யோகா­சனம் போன்ற பல வித எளிய சிகிச்சை வழி­மு­றை­களில் இதற்கு தீர்வு அளித்து வரு­கிறோம்.

அதே போல தற்­போது புத்­து­ணர்வு சிகிச்சை என்ற பெயரில் ஒரு சிகிச்­சையை வழங்கி வரு­கிறோம். இதன் மூலம் தோல் பரா­ம­ரிப்பு மற்றும் வலு­வான திசுக்கள் புத்­து­ணர்வு பெற்று, ஆரோக்­கி­ய­மாக வாழ வழி செய்­கி­றது. உட­லுக்கு ‘புத்­து­ணர்­வூட்டி’ (முதன்மை சுறு­சு­றுப்பு) மற்றும் ‘சாத்வா’ (மனத் தெளிவை) அதி­க­ரிக்கச் செய்து உடலின் நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்கச் செய்­கிறோம். தலை மற்றும் முகத்­திற்­கான மருத்­துவ எண்ணெய் மற்றும் கிறீம்­க­ளோடு கூடிய மசாஜ், கை, பாதம் போன்­ற­வற்றில் மூலிகை எண்ணெய் மற்றும் தூளோடு கூடிய மசாஜ், புத்­து­ணர்ச்­சிக்­காக உள் கொடுக்­கப்­படும் மருந்­துகள், மருந்­தேற்­றப்­பட்ட நீராவி குளியல் மற்றும் மூலிகை குளி­யல்­களும் கூட இதன் போது பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

அதே போல் ஒரு­சி­ல­ருக்கு முதுமை அடையும் செயற்­பாங்­கினை குறைத்து உடல் செயல்கள் சீர்­கேடு அடை­வதைத் தடுத்து உட­லுக்கு நோய் எதிர்ப்பு ஆற்­றலை கொடுக்கும் முதன்­மை­யான சிகிச்­சை­யாக காய­கல்ப சிகிச்சை வழங்­கப்­ப­டு­கி­றது. இது இர­சா­ய­னத்தை உள்ளே எடுத்துக் கொண்டு (சிறப்பு ஆயுர்­வேத மருந்­துகள் மற்றும் உண­வுக்­கட்­டுப்­பாடு) முழு­மை­யான உடல் பரா­ம­ரிப்பு நிகழ்ச்­சி­களை உள்­ள­டக்­கி­ய­தாகும். இந்த மருத்­துவம் 50 வய­திற்கு முன்­பாக எடுத்துக் கொண்டால் இரு­பா­லா­ருக்கும் மிகவும் பயன் தரு­வ­தாக இருக்கும்.

அதே போல் உட­லி­லுள்ள கழி­வு­களை வெளி­யேற்றி தோலை மினு­மி­னுப்­ப­டை­யவும் தோல் ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­தவும் அத்­துடன் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்­கவும் உடல் வெது­வெ­துப்­பூட்டல் (ஸ்வேத­கர்மம்) எனப்­படும் மருந்­தேற்­றப்­பட்ட நீராவி குளியல் சிகிச்சை வழங்­கப்­ப­டு­கி­றது. இதன் மூலம் மூட்டு வலிக்கு சிறந்த நிவா­ர­ணமும் கிடைக்­கி­றது. அத்­துடன் இரத்த ஓட்­டத்தை சீராக்­கு­வதால் மூட்டு வலி குறை­யவும் வாய்ப்பு உண்­டா­கி­றது.

ஒரு சில­ருக்கு உடல் எடையை குறைக்க பேரி­யாட்ரிக் சத்­திர சிகிச்சை செய்து கொள்­வார்கள் அல்­லது சுப்­பர்­பி­ஷியல் லைப்­போ­சக் ஷன் போன்ற சத்­திர சிகிச்­சை­க­ளையும் மேற்­கொள்­வார்கள். இதன் பின்னர் அவர்கள் அறி­வு­றுத்தும் உணவு கட்­டுப்­பாட்டை ஆயுள் முழு­வதும் கடை­பி­டிக்­க­வேண்­டி­ய­தி­ருக்கும். ஆனால் ஆயுர்­வேத சிகிச்­சையில் உடல் எடையை குறைக்க மருத்­துவ மூலி­கைத்தூள் மற்றும் மருத்­துவ மூலிகை எண்ணெய், மசாஜ், உணவு கட்­டுப்­பாட்டு, ஆயுர்­வேத மருத்­துவ மூலிகைச் சாறு ஆகி­யவை வழங்­கப்­ப­டு­கி­றது. இதன் மூலம் பக்­க­வி­ளை­வு­க­ளற்ற பலன் சாத்­தி­ய­மா­கி­றது. ஒழுக்க நடை­மு­றைகள் (யாமா), சுய சுத்­தி­க­ரிப்பு (நயாமா), உடலை தாமரை நிலையில் நிலை­நி­றுத்­துதல் (ஆசனா), மூச்சை கட்­டு­ப­டுத்­துதல் (பிரா­ண­யாமா), உணர்­வு­களை கட்­டுப்­ப­டுத்­துதல் (பிரத்­தி­ய­கர்மா) தெரிவு செய்­யப்­பட்ட பொருளின் மீது எமது கவ­னத்தை குவித்தல் (தரானா),தியானம் (தியானா) மற்றும் சமாதி அதாவது நீங்கள் முழுவதுமான சாந்தியையும் ஆரோக்கியத்தையும் நிலைநிறுத்திக் கொள்வதற்கான நிலை என இந்த எட்டு நிலைப்பாடுகளில் ஒரு மனிதன் முழுமையாக ஈடுபடத்தொடங்கிவிட்டால் அவனுக்கு எந்த ஆரோக்கிய குறையும் ஏற்படாது என்று சொல்லலாம்.

மேலதிக விபரங்களுக்கு

தொடர்பு கொள்ளவேண்டிய

அலைபேசி எண் 0091 452 2692721 மற்றும் மின்னஞ்சல் முகவரி

drpremvel@gmail.com

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04