அடுத்த 6 மாதங்களில் 12 இலட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் : யுனிசெப் வெளியிட்டு அதிர்ச்சித் தகவல்

Published By: J.G.Stephan

14 May, 2020 | 07:48 PM
image

கொரோனாவின் தாக்கம் காரணமாக, அடுத்த 6 மாதங்களில் உலகளாவிய ரீதியில் 12 இலட்சம் குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் என்று ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதார பள்ளி (Johns Hopkins Bloomberg School of Public Health) நிறுவனத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், குழந்தை பிறப்பு, சிசு பாதுகாப்பு, நோய்த் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



பல நாடுகளில்பாடசாலைகள் மூலமாகத் தான் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், தற்போது அவை மூடப்பட்டுள்ளதால் முறையாக  உணவின்றி தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் பெரும் அபாயத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 6 மாதங்களில், 5 வயதிற்குட்பட்ட 12 இலட்சம் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதலாக உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 3 இலட்சம் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மேலும், பிரேசில், பாகிஸ்தான், நைஜீரியா, மாலி மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் உயிரிழப்பு  அதிகளவில் இருக்கும் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக யுனிசெப் சுட்டிக் காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21