தடுப்பூசிக்கு எதிராக மனித உடலுக்குள் தன்னை உருமாற்றி கொள்ளும் கொரோனா : விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

Published By: J.G.Stephan

14 May, 2020 | 07:54 PM
image

உலகை உலுக்கிவரும் கொரோனா, மனித உடலுக்குள்ளும் சென்று, பலவிதமாக மாற்றம்பெற்று, தனது ஆக்கிரமிப்பை நிலைநாட்டி வருகிறது. 

அந்தவகையில், மனித உடலுக்குள் சென்றதும் தடுப்பூசி போட்டிருந்தாலுமு் கூட, கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றி கொள்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

வாய், மூக்கு மற்றும் கண்களின் வழியாக மனித உடலுக்குள் நுழையும் கொரோனா வைரஸ், ஸ்பைக் என்று அழைக்கப்படும் கொக்கி போன்ற புரதத்தின் மூலம் மனித செல்களோடு இணைகிறது. 

இந்த இணைவு வெற்றிகரமாக நடந்தவுடன், வைரஸ் தனது மரபணுவை மனித செல்களுக்குள் புகுத்தும்.

மனித செல்களுக்குள் நுழையும், கொரோனாவின் மரபணு, அந்த செல்லை வைரசின் இனப்பெருக்க தளமாக மாற்றுகிறது. இப்போது பாதிக்கப்பட்ட செல், ஒரு வைரசாகவே மாறி, பல்கிப்பெருகிறது.



பொதுவாக வைரசுக்கு எதிராக செலுத்தப்படும் தடுப்பு மருந்து, வைரசின் ஸ்பைக் புரதம் குறித்த தகவலை உடலுக்கு அளிக்கிறது.

அதனால், தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் உடலுக்குள் வைரஸ் நுழையும் போது ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, மனித செல்கள் அதனுடன் இணைவதை தவிர்க்கின்றன.

ஆனால், கொரோனா வைரசின் இந்த ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வதாக தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகம் முழுவதும், 62 நாடுகளில் 5349 கொரோனா  மாதிரிகளை சோதனை  செய்த  விஞ்ஞானிகள் அதன் மரபணுவில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதையும், இதன் காரணமாக ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொண்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தின்  தற்போதைய வடிவத்தின் அடிப்படையிலேயே உலகம் முழுவதும் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஸ்பைக் புரதம் தன்னை உருமாற்றிக்கொள்வது, அந்த தடுப்பு மருந்துகளை பயனற்றதாக மாற்றி விடும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால், உருமாற்றம் நடைபெறாத வைரஸ்களுக்கு எதிராக மட்டுமே தடுப்பு மருந்துகள் வேலை செய்யும் நிலை ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, தடுப்பு மருந்துகள் தயாரிப்பவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசில் ஏற்படும் மரபணு மாற்றங்களையும் கருத்தில்கொள்ள வேண்டிய தேவை உள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33