சர்வதேச ரீதியில் 4,350,026 பேர் கொரோனாவினால் பாதிப்பு ; 297,251 பேர் உயிரிழப்பு!

Published By: Vishnu

14 May, 2020 | 03:46 PM
image

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 4,350,026 ஆக அதிரித்துள்ளது.

அத்துடன் கொரோனா காரணமாக 188 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 297,251 பேர் உயிரிழந்துள்ளதுடன், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,551,911 ஆக காணப்படுகிறது.

அதிகளவான கொரானா தொற்றாளர்களை கொண்டுள்ள நாடுகள்:

  • அமெரிக்கா: 1,390,764 
  • ரஷ்யா: 242,271 
  • பிரிட்டன்: 230,985
  • ஸ்பெய்ன்: 228,691 
  • இத்தாலி: 222,104 
  • பிரேஸில்: 190,137 
  • பிரான்ஸ்: 178,184
  • ஜேர்மன்: 174,098 
  • துருக்கி: 143,114 
  • ஈரான்: 112,725 
  • சீனா: 84,024 
  • இந்தியா: 78,194 
  • பேரு: 76,306 
  • கனடா: 73,568 
  • பெல்ஜியம்: 53,981 

கொரோனாவினால் அதிகளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நாடுகள்:

  • அமெரிக்கா: 84,136 
  • பிரிட்டன்: 33,264 
  • இத்தாலி: 31,106 
  • ஸ்பெய்ன்: 27,104 
  • பிரான்ஸ்: 27,077 
  • பிரேஸில்: 13,240 
  • பெல்ஜியம்: 8,843 
  • ஜேர்மன்: 7,861 
  • ஈரான்: 6,783 
  • நெதர்லாந்து: 5,581 
  • கனடா: 5,425 
  • சீனா: 4,637 
  • மெக்ஸிகோ: 4,220 
  • துருக்கி: 3,952 
  • சுவீடன்: 3,460 
  • இந்தியா: 2,551 
  • எகுவாடோர்: 2,334 
  • ரஷ்யா: 2,212 
  • பேரு: 2,169 
  • சுவிட்சர்லாந்து: 1,870 
  • அயர்லாந்து: 1,497 
  • போர்த்துக்கல்: 1,175 
  • ருமேனியா: 1,036 
  • இந்தோனேஷியா: 1,028 

ரஷ்யா

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் 9,974 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் கண்காணப்பு தலைமையகம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 12 நாட்களில் முதல்முறையாக 10 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா தொற்றாளர்கள் ரஷ்யாவில் அடையாளம் காணப்பட்டுள்ளமை இது முதல் சந்தர்ப்பமாகும்.

ரஷ்யாவில் தற்போது மொத்தமாக 242,271 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 2,212 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளான 48,003 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

இந்தியா

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஏனைய நாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் 30,000 இந்தியப் பிரஜைகளை அழைத்து வருவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான பாரிய நடவடிக்கையில் இது இரண்டாம் கட்டம் ஆகும்.

அதன்படி இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மே 16 முதல் மே 22 வரையான காலப் பகுதியில் 149 விமானங்களில் 31 நாடுகளில் இருந்து இந்தியப் பிரஜைகள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் கூறினார்.

முதல் கட்ட நடவடிக்கையில் 64 விமானங்களில் பயணிக்க பதிவுசெய்யப்பட்ட 14,800 இந்தியர்களில் மொத்தம் 8,500 பேர் முன்னதாக நாடு திரும்பியுள்ளதாகவும் பூரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்காவில் புதன்கிழமை குறைந்தது 21,030 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 1,763 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் மொத்தமாக 1,390,764 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 84,136 உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் 243,430 பேர் குணமடைந்தும் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13