ஒரே கொள்கைத்திட்டத்தை கொண்டிருப்பதால் ஒன்றிணைவதில் சிக்கல் இல்லை - மயாந்த திஷாநாயக்க

Published By: Digital Desk 3

14 May, 2020 | 12:40 PM
image

(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும்  ஒரேமாதிரியான கொள்கைத்திட்டத்தை கொண்டிருப்பதனால் எதிர்வரும் காலத்தில் ஒன்றிணைவதற்கு சிக்கல் இல்லை. பொதுத் தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின் பின்னரும் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டால் நாங்கள் இணைந்து செயற்பட தயாராகவே உள்ளோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயாந்த திஷாநாயக்க தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் காரணமாக பொருளாதார நெருக்கடி மற்றும் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் விட தேர்தல் அவசியமற்றது அதனாலேயே தேர்தலை நடத்த முன்னர் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தெரிவிக்கின்றோம். அதனை ஆளும் தரப்பினர் நாங்கள் தேர்தலுக்கு அஞ்சியே இவ்வாறு கூறிவருவதாக காண்பிக்க முயற்சிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை காரியாலயத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் தம்மிடம் நிதி இல்லை என்று தெரிவித்துக் கொண்டு அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்காக வழமை ஒப்பந்த திட்டத்திற்க புறம்பாக அவர்களுக்கு சாதகமான நிறுவனமொற்றுக்கு ஒப்பந்தப்பணம் வழங்குவதற்காக, அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதற்கமைய 31.7 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளது. வைரஸ் பரவலின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்கான தேவை என்ன? தற்போது மக்களின் நலனை பாதுகாப்பதே அவசியமாகும்.

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக பாராளுமன்றத்தை ஒரு நாள் மாத்திரமாவது மீண்டும் கூட்டி கொரோனா தொடர்பான சட்டம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை மெற்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசாங்கத்திற்கு  பெற்றுக் கொடுக்க எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் தயாராக உள்ளோம்.இதேவேளை விவசாய துறையை முன்னேற்றுவது என்றால் இ விவசாயிகளுக்கு தேவையான பசளைகள் மற்றும் விதைகளை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை இரு மாத மின்சாரம் , நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதால், அதனை முழுமையாக செலுத்துவதற்கான வசதிகள் தற்போது மக்களிடம் இல்லை.அதனால் அந்த கட்டணங்களை அரசாங்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் உதய கம்மன்பில போன்றோர், ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைவதன் நோக்கிலே தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை விடுத்துவருவதாக தெரிவிக்கின்றனர். ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒரே கொள்கைத்திட்டத்தைக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே ஐக்கிய மக்கள் சக்தியிலும் உறுப்புரிமை பெற்றுக் கொண்டுள்ளவர்கள்இ அதனால் தேர்தலுக்கு முன்னரே நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேர்தலின் பின்னரும் தேவை ஏற்படின் நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவோம். இந்த ஐக்கிய மக்கள் சக்தி ஐ.தே.க.வின் செயற்குழுவின் அனுமதியுடன் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டணியாகும்.

அரச தரப்பைச் சேர்ந்த பலர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது திருப்தியற்று எம்மோடு கைக்கோர்க்க தயாராக உள்ளனர், பலர் எம்முடன் தொலைபேசியூடாக தொடர்புக் கொண்டும் இது தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

அதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பீதியினாலேயே பாராளுமன்றம் மீண்டும் கூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இன்று பெருமளவான அரசியல் ஒப்பந்தங்கள்(டீல்) இடம்பெறுகின்றன.

இவற்றை இல்லாதொழிக்க வேண்டும். அதனாலேயே முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவின் தலைமையில் நாங்கள் களமிறங்க உள்ளோம். மக்கள் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் எடுத்த தீர்மானம் தொடர்பில் தற்போது தெளிவடைந்திருப்பார்கள்.அதனால் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த உறுப்பினர்களையே அதிகளிவில் தெரிவுசெய்வார்கள் என்று நம்பிக்கை எமக்குள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51