ஜனாதிபதி கோத்தாபய இராணுவ ஆட்சிக்கு வித்திட்டுள்ளார் - நிரோஷன் பெரேரா எச்சரிக்கை

Published By: Digital Desk 3

14 May, 2020 | 12:38 PM
image

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றது. இதன் எச்சரிக்கை கருத்திற் கொள்ளமல் வினோதமடைய முயற்சிக்காதீர்கள், இராணுவத்தினர் ஒருவர் உங்கள் வீட்டின் கதவையும் தட்டுவதற்காக வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரால் சுமேந்ர பெரேராவை விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார். இராணுவத்தினரிடம் எவ்வகை ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவின்றி செயற்பட்டு வருகின்றது.

மருத்துவ சங்கத்தினர் வைரஸ் பரவலையும் யுத்தத்தையும் தொடர்பு படுத்தி குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தபோதும், கொரோனா தொற்றுக் குள்ளானவர்களை அடையாளம் காணுவதற்காக கடற்படையினரை அனுப்பினர். அதனால் இன்று பெருமளவான கடற்படையின் கொரோனா தொற்றுக் குள்ளாகியுள்ளனர்.

நகரசபை, பிரதேசசபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அனுபவம் கூட இல்லாத கோத்தாபயவுக்கு எவ்வாறு இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது என்ற தெளிவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் கடந்தகால ஆட்சியில் இராணுவத்தினருடன் சிவில் பொறுப்புகனை கையளித்தமையினால் ஏற்பட்ட விபரீதங்களை அனைவரும் நன்கறிவீர்கள்.

தனது அடிப்படை உரிமையான குடி நீரை பெற்றுக் கொள்வதற்காக ரத்துபஸ்வல பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்களுக்கு நடத்த விளைவு தொடர்பில் அனைவருக்கும் நினைவிருக்கும். கோத்தாபயவின் செயற்பாடுகள் தொடர்பில் நம்மைவிட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெளிவுக் கொண்டிருக்கிறார்.

அதனால், இந்த இராணுவ ஆட்சியினால் எங்களுக்கு பாதிப்பில்லை, ஐக்கிய மக்கள் சக்திக்கே பாதிப்பு ஏற்படும் என்ற எண்ணத்தில், மூடத்தனமான குதூகளத்தில் இருக்காதீர்கள், இராணுவத்தினர் ஒருவர் நாளை உங்கள் வீட்டுக்கதவை தட்டி, வீட்டிலுள்ளவர்களை இழுத்துச் செல்வதற்கான வாய்ப்பும் இருக்கின்றது என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

காலகாலமாக அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை வகித்த அரச நிர்வாகத்துறையின் மீது நம்பிக்கை கொண்டிராத ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, அவருடைய சகாக்களான ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர் மீது கொண்டுள்ளார். இதன் காரணமாகவே நிர்வாகத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பொறுப்புகளை தற்போது இராணுவத்திரை கொண்டு நிறைவேற்றி வருகின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51