கல்வித்துறை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி

Published By: Priyatharshan

14 May, 2020 | 11:26 AM
image

கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரத்துக்கு அடுத்தபடியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது கல்வித்துறை ஆகும். பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல, வழியின்றி வீடுகளில் முடங்கி போய் உள்ளனர்.

இதே நிலைமை நீடித்தால் அவர்களின் பரீட்சைகள், தாமதமாவதுடன் குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் கல்வியை பூர்த்திசெய்ய முடியாத நிலைமை ஏற்படும். குறிப்பாக பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் புதுமுக மாணவர்கள் ஆகியோர், பல்கலை கழகங்கள்  ஆரம்பிக்கப்படாது மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக படிப்பை நிறைவு செய்து வேலைவாய்ப்பைத் தேட, மேலும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டி வரும்.

சாதாரணமாகவே பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் பகிஸ்கரிப்பு போராட்டங்கள் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பின் தள்ளப்பட்டு உள்ளன.

இந் நிலையில்  கொரோனா தொற்றை அடுத்து பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன.

நிலைமையை சீர்செய்து மீண்டும் பாடசாலைகளை இயங்கச் செய்ய சுமார் ஒரு மாத காலம் நீடிக்கும் என அரச தகவல்கள் கூறுகின்றன.

அதுவும் பகுதியாகவே பாடசாலைகள் ஆரம்பமாக உள்ள நிலையில், ஆரம்ப வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மேலும் தாமதமாகலாம். இவற்றுக்கு மத்தியில் வீட்டில் இருந்தவாறு கல்வி கற்பிப்பது, கற்பது போன்ற செயற்பாடுகள் கூறுவதற்கு நன்றாக இருக்குமே தவிர, நடைமுறைக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறியாகும்.

ஒருவேளை உணவுக்கே வழியின்றி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் எத்தனை பேரிடம் ஸ்மார்ட்போன் இருக்கும் என்பதை கூற வேண்டியதில்லை.

மாணவர்கள் பலர் பாடசாலைகளுக்கு பாடப் புத்தகம் வாங்க முடியாத நிலையிலும் சீருடை வாங்கவசதியற்ற நிலையிலும் அரசாங்கத்தின் இலவச உதவிகளுக்காக காத்திருப்பதும் புதிய விடயமல்ல.

 இதேவேளை கல்வித்துறை மோசமாக பாதிக்கப்படும் என உலகவங்கி எச்சரித்துள்ளது. மேலும் உலகில் இன்று கல்வி நடவடிக்கைகள் மோசமான பின்னடைவைக் கண்டுள்ளன.

இது எதிர்காலத்தில் சகல மட்டங்களிலும் பாரிய தாக்கத்தை செலுத்துவதை தவிர்க்க முடியாது போகும்.

குறித்த வைரஸ் தாக்கத்திற்கு முன்பிருந்தே  25 கோடியே 80 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறார்கள், கல்வி நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளவில்லை என உலக வங்கி சுட்டிக்காட்டி யுள்ளது.

எனவே மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதுடன் விரைவாக  அடுத்தகட்ட நடவடிக்கைக்களை ஆரம்பிக்க வேண்டும்.

கல்வி செயற்பாடுகளை மீள் ஆரம்பிக்க மேலும் காலதாமதமாக நேர்ந்தால் நிலமை மேலும் மோசமடைவதை தவிர்க்க முடியாது.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22