(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாளை மறுதினம் புதன்கிழமை உரையாற்றவுள்ள  வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர  இன்று ஜெனிவா வந்தடைந்தார். 

நோர்வேயிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருந்து  உக்ரேனுக்கு விஜயம்  செய்திருந்தார். அந்தவகையில்  உக்கேரினிலிருந்து  அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவா வந்தடைந்தார். 

அந்தவகையில் நாளைய தினம் ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடைபெறவுள்ள   இலங்கை  விவகாரம் குறித்த  உபகுழுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு   அமைச்சர் மங்கள  சமரவீர உரையாற்றவுள்ளார். 

மேலும்  நாளை மறுதினம் புதன்கிழமை  ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கையின்  சார்பில் குறுகியநேர  உரையொன்றை ஆற்றவுள்ள     அமைச்சர் மங்கள சமரவீர   உள்ளக விசாரணைப் பொறிமுறை விசாரணையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.