ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண 2021 தகுதிகாண் உட்பட இரு தகுதிகாண் சுற்றுகள் ஒத்திவைப்பு

12 May, 2020 | 11:08 PM
image

இலங்கையில் நடைபெறவிருந்த ஐ. சி. சி. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் சுற்று உட்பட இரண்டு தகுதிகாண் சுற்று கிரிக்கெட் போட்டிகளை கொரோனா நோய்த் தாக்கம் காரணமாக பிற்போட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்தது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தகுதிகாண் சுற்று இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதிமுதல் 9ஆம் திகதிவரை நடைபெறவிருந்தது.

19 வயதுக்குட்பட்ட 2022 உலகக் கிண்ணப் போட்டிக்கான ஐரோப்யிய வலயம் இரண்டாம் பிரிவுக்கான தகுதிகாண் சுற்று டென்மார்க்கில் ஜூலை மாதம் நடைபெறவிருந்தது.

சர்தேச கிரிக்கெட் பேரவையின் விரிவான திட்டமிடல் செயற்பாட்டின் ஒர பகுதியாகவும் உறுப்பு நாடுகள் மற்றம் சம்பந்தப்பட்ட அரசுகள், பொது சுகாதார அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னரே இப் போட்டிகளைப் பிற்போடத் தீர்மானித்ததாக சர்வதேச கிரிக்கெட் பெரவை தெரிவித்தது.

இந்தப் போட்டிகளை எப்போது நடத்துவது என்பது குறித்து பங்குபற்றும் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடப்படும் எனவும் பேரவை குறிப்பிட்டது.

மகளிர் உலகக் கிண்ண 2021 தகுதிகாண் சுற்றில் வரவேற்பு நாடான இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், பிராந்திய சம்பியன்களான ஸிம்பாப்வே, தாய்லாந்து, பப்புவா நியூ கினி, நெதர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா ஆகியன விளையாடவிருந்தன.

தகுதிகாண் சுற்றில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள் ஏற்கனவே மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டுள்ள நடப்பு சம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, நியூஸிலாந்து ஆகிய வற்றுடன் இணைந்துகொள்ளும். (என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58