ரசிகர்களின்றி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ்  நடத்தப்படும் - போட்டி அமைப்பாளர்கள் உறுதி

Published By: Digital Desk 3

12 May, 2020 | 08:37 PM
image

குறைந்த பட்சம் ரசிகர்களின் பங்குபற்றல் இல்லாமலாவது பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியை நடத்துவோம் என போட்டி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்துள்ள பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இம்மாதம் 24 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிப்பட்டிருந்தது.

எனினும்,  கொரோனா வைரஸ் அச்சத்தால் இப்போட்டியை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி முதல் அக்டோபர் 4 ஆம் திகதி வரை  பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ்  போட்டி நடைபெறும் என அமைப்பாளர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையை பார்க்கும்போது இந்த போட்டி ரசிகர்களின்றி பூட்டிய மைதானத்தில் நடத்தப்படலாம் என்று பிரெஞ்ச் டென்னிஸ் சங்க தலைவர் பேர்னாட் குடிசெலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

‘‘ரசிகர்களின்றி இப்போட்டி நடத்தப்படுவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. போட்டி வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதே முக்கியம்.

இப்போட்டியைக் காண உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ரசிகர்கள் இல்லாமல் நடந்தாலும், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு மூலமாக போட்டிகளை ரசிகர்களுக்கு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்’’என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35