நிறைவேறுமா திசர பெரேராவின் ஆசை ?

Published By: J.G.Stephan

12 May, 2020 | 02:58 PM
image

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான திசர பெரேரா ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால்பதித்த திசர பெரேரா, இப்போட்டியில் 14 பந்துகளில் 31 ஓட்டங்களை விளாசி அனைவரினதும் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

தனது 11 ஆண்டுகாள சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை  அணிக்காக பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ள திசர பெரேரா, இலங்கை  அணியில் 3ஆம் இலக்க வீரர் முதல் 9ஆம் இலக்க வீரர் என துடுப்பெடுத்தாடியுள்ளார். 

இதில் அநேமாக 6 ஆம், 7 ஆம் இலக்க வீரராகவே அதிக தடவைகள் துடுப்பெடுத்தாடியுள்ளார்.



இந்நிலையில், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்க விரும்புவதாக திசர பெரேரா இணையத்தளமொன்று தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் கூறுகையில்,

“பாடசாலை கிரிக்கெட்டின் 15 வயதுக்குட்பட்டோர் போட்டிகளில் நான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டுள்ளேன். ஆகையால் என்னால் சர்வதேச போட்டிகளிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கி சிறப்பாகத் துடுப்பெடுத்தாட முடியும். மேலும், களத்தடுப்பு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நேரங்களில் பந்துகளை களத்தடுப்பாளர்களுக்கு மேலாக அடித்து பெளண்டரிகளை பெற முடியும்” என்றார்.

பாசாலைக் கிரிக்கெட்டின் ஆரம்பக்காலத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக திசர பெரேரா களமிறங்கியிருந்தாலும், அணியின் தேவைக்காக அவரின் துடுப்பாட்ட வரிசையை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.

“'15 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடும் போது எனது பயிற்றுநரான ஹர்ஷ டி சில்வா என்னை மத்தியவரிசையை பலப்படுத்துவதற்கு, மத்தியவரிசையில் களமிறங்குமாறு கூறினார்.

அன்றிலிருந்து 17 வயதின் கீழ், 19 வயதின் கீழ்,  உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் மத்தியவரிசையில் துடுப்பெடுத்தாடி வருகின்றேன்.

எனினும்,   எதிர்வரும் காலங்களிலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்கு விரும்புகிறேன். ஆனால், தேசிய அணியில் பின்வரிசை வீரராக களமிறங்கி விளையாட வேண்டிய தேவை உள்ளது. களத்தடுப்பாளர்கள் பௌண்டரி எல்லையில் இருந்தாலும், என்னால் அதனை கடந்து துடுப்பெடுத்தாட முடியும்'  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58