தேர்தல் ஆணைக்குழுவிற்கு அரசாங்கம் ஒருபோதும் அழுத்தங்களை பிரயோகிக்காது - செஹான் சேமசிங்க

Published By: Digital Desk 3

11 May, 2020 | 08:14 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுகாதார தரப்பினரது பரிந்துரை மற்றும்  ஆலோசனைகளுக்கு அமையவே பொதுத்தேர்தல் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும். அரசாங்கம்   தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்கிக்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி,ஐக்கிய மக்கள் சக்தி ஆகியோர் ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள். தேர்தலை எதிர்க் கொள்ளும் அச்சத்திலேயே இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

பொதுத்தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பொதுஜன பெரமுனவினால் முறையாக வகுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக  தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

பொதுத்தேர்தலை இலக்காக  கொண்டு ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்படவில்லை. சவால்களை  பாதுகாப்பான முறையில் வெற்றிக் கொள்ள வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதன் காரணமாகவே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

சுகாதார  தரப்பினரது ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம் பொதுத்தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும்.

பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான பலத்துடன் ஆட்சியமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08