வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சகல விசாக்கள் குறித்து இந்திய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Published By: J.G.Stephan

11 May, 2020 | 07:07 PM
image

(எம்.மனோசித்ரா)

இராஜதந்திர, உத்தியோகபூர்வ, ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைப்புக்கள், வேலைவாய்ப்பு அல்லது நிகழ்ச்சித்திட்ட வகைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்ட சகல விசாக்களும் இந்தியாவிலிருந்தும் இந்தியாவை நோக்கியும் மேற்கொள்ளப்படும் சகல  சர்வதேச பயணங்கள் மீதான தடை உத்தரவினை இந்திய அரசு நீக்கும் வரையில் இடைநிறுத்தம் செய்யப்படுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.



இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பிரஜைகளின் விசாக்கள் காலாவதியாகியிருந்தாலோ அல்லது 2020 பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்திய அரசாங்கத்தால் சர்வதேச பயண தடை நீக்கும் வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியடையுமாக இருந்தாலோ தமது விசாவினை  இலவசமாக புதுப்பித்து கொள்வதற்காக வெளிநாட்டவர்கள் பிராந்திய பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.

அதனடிப்படையில் மேலதிக காலம் தங்கியிருந்தமைக்கான தண்டம் எதுவுமின்றி இந்திய அரசாங்கத்தால் சர்வதேச பயணத் தடை நீக்கப்படும் நாளிலிருந்து 30 நாட்களுக்கு விசா நீடிக்கப்படும். அதேபோல வெளிநாட்டு பிரஜைகள் வெளியேறுவதற்கும் இதே முறையினூடாக அணுகி அனுமதியினைப் பெறமுடியும்.

வெளிநாடுகளில் வாழும் இந்திய பிரஜைகளுக்கான அட்டை வைத்திருப்பவர்களின் விசா இன்றிப் பயணிக்கும் அனுமதி இந்தியாவிலிருந்தும் இந்தியாவை நோக்கியும் மேற்கொள்ளும் சர்வதேச பயணங்கள் மீதான தடை இந்திய அரசால் நீக்கப்படும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தவிர்க்க முடியாத காரணம் ஒன்றுக்காக இந்தியாவுக்கு பயணிக்க விரும்புவோர் அருகிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளவும். தற்போது இந்தியாவில் தங்கியுள்ள OCI அட்டை வைத்திருப்போரின் OCI அட்டைகள் அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதி வரை செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52