கொள்ளையிட்ட பணத்தைக்கொண்டு அரச ஊழியர்களுக்கு 6 மாதம் வரை ஊதியம் கொடுக்க முடியும் : சம்பிக்க

Published By: J.G.Stephan

11 May, 2020 | 06:27 PM
image

(செ.தேன்மொழி)

நாட்டு மக்களிடம் கொள்ளையிடப்பட்ட பணத்தை கொண்டு அரச ஊழியர்களுக்கு ஆறுமாதம் வரை எந்த சிக்கலும் இன்றி ஊதியம் பெற்றுக் கொடுக்க முடியும். நாட்டு மக்களின் நிதியை மோசடி செய்தவர்களுக்கு அரச ஊழியர்கள் எதற்கு சம்பளத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,  இவர்களுக்கு எதிராக அரச ஊழியர்கள் குறல் எழுப்பவேண்டும் என்றும் கூறினார்.





இதேவேளை, டைட்டானிக் கப்பல் மாதிரி பொருளாதார கப்பலொன்றை கடலுக்குள் அனுப்பி அது பொருளாதார நெருக்கடி எனும் பனிக்குன்றில் மோதி முழ்கிக் கொண்டடிருக்கையில் உழைக்கும் மக்களை தோணிகளில் ஏறும்படி கூறுவதே தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார  சித்தாந்தம் என்றும் குறிப்பிட்டார்.  

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,  

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் அரச நெறுக்கடிகளுக்கு முற்றிலும் பொறுப்புக் கூறவேண்டிய ராஜபக்ஷ குடும்பத்தினருக்கும், பேராசிரியர் பி.பீ.ஜெயசுந்தரவுக்கும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு  எவ்வகையிலும் உரிமைக்கிடையாது என்பதுடன் அது தார்மீகமற்ற செயலாகும்.

ஜயசுந்தர ராஜபக்ஷ குடும்பத்தினரின் சௌபாக்கிய பாதையின் வழிகாட்டியாக இருப்பதுடன் அவர்களை இரச்சிப்பவராகவும் விளங்குபவர்.

அதனால் அவரது  கருத்து அவரது சொந்த கருத்தாகிவிட முடியாது. மஹிந்த, கோத்தாபய மற்றும் பசில் உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தின் பொருளாதார கொள்கையாகும். தற்போது நாட்டில் நிலவும் துரதிஷ்டவசமான பொருளாதார நிலைக்கு ராஜபக்ஷர்களைப் போன்று பி.பீ.ஜயசுந்தரவும் பொறுப்புக் கூறவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும் அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:57:56
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04