பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைத் திகதி அறிவிப்பு 

11 May, 2020 | 12:41 PM
image

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறுமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாராளுமன்றக் கலைப்பு மற்றும் தேர்தல் நடத்துவற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையே இம்மாதம் 18 ஆம் மற்றும் 19 ஆம் திகதிகளில் இடம்பெறுமென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி  இலங்கையில் பொதுத் தேர்தல் நடாத்த திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யக் கோரி கடந்த 2 ஆம் திகதி, சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்ட பலரால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது. .

அரசியலமைப்பின்  104 (அ ) சரத்துடன் இணைத்து வாசிக்கத்தக்கதாக  126,17 ஆம் சரத்துக்களின் அடிப்படையில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய,  ஆணைக் குழு உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, ரத்னஜீவன் ஹூல், ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தர,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராக முடியாத நிலையில் தாம் இருப்பதாக சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார் .

பாராளுமன்றக் கலைப்பு மற்றும் ஜூன் 20 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின்போது தேர்தல் ஆணையகம் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜராகும் நிலையில் தான் இல்லையென்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14