ட்ரம்பின் உறுதியற்ற அணுகுமுறையே கொரோனா பேரழிவுக்குக் காரணம்: ஒபாமா விசனம்

Published By: J.G.Stephan

11 May, 2020 | 10:13 AM
image

கொரோனா வைரஸ் பரவும் சூழலில் ஜனாதிபதி ட்ரம்பின் உறுதியற்ற அணுகுமுறையால் தான் அமெரிக்காவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விசனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள்  ஜனாதிபதி ஒபாமா, தனது ஆட்சியின்போது பணிபுரிந்த ஊழியர்களுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (09.05.2020) நடந்த சந்திப்பில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் பணியில் இருந்த சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கலந்துரையாடினார். 

அப்போது பேசிய முன்னாள் ஜனாதிபதி  ஒபாமா,  கொரோனா வைரஸ் பிரச்சினையை ஜனாதிபதி  டிரம்ப் அரசு கையாண்ட விதம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.



அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவலின்போது ஜனாதிபதி  ட்ரம்பின் மோசமான பதிலானது உலகளாவிய நெருக்கடியின்போது வலுவான அரசு ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான ஒரு முக்கிய நினைவூட்டாக இருந்தது. 

கொரோனா நோய்க்கு எதிரான  ஜனாதிபதி  ட்ரம்பின் அணுகுமுறை உறுதியற்றதாயிருந்தது. பெப்ரவரியில் கொரோனா வைரஸ் பரவுதல் குறித்த தகவலை அவர் நிராகரித்தார்.

அது காணாமல் போய்விடும் என்றார். பின்னர் மார்ச் மாத நடுவில் நோயின் தீவிரத்தை அவரே ஒப்புக்கொண்டார். கொரோனா உயிரிழப்புக்கள் முற்றிலும் குழப்பம் நிறைந்த அரசின் நிர்வாகத்தால் ஏற்பட்ட பேரழிவாகும்.

சுயநலவாதியாகவும், பழமைவாதியாகவும், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கு மற்றும் மற்றவர்களை எதிரியாக பார்க்கும் போக்கை எதிர்த்து நாம் போராடுகிறோம்.

இது மக்களிடையே ஒரு வலுவான தூண்டுதலாக மாறியுள்ளது. ஜனாதிபதி  ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீதான வழக்கை நீதித்துறை கைவிட்டுவிட்டது என்பது சட்டத்தின் ஆட்சி குறித்த அடிப்படை புரிதல் ஆபத்தில் உள்ளதை காட்டுகின்றது. 

நீ்ங்கள் அனைவரும் முன்னாள் துணை  ஜனாதிபதி  ஜோ பிடென் மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நான் இனி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடெனை ஆதரித்து பிரசாரத்தை மேற்கொள்வேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52