நாய் இழுத்துச்சென்ற நிலையில் சிசுவின் சடலம் மீட்பு : பிரசவித்துவிட்டு குழந்தையை கைவிட்டுச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் கைது - மட்டக்களப்பில் சம்பவம்

Published By: J.G.Stephan

11 May, 2020 | 11:20 AM
image

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மண்டூர் ஆணைக்கட்டு பிரதேசத்தில் தாகாத முறையில் குழந்தையை பிரசவித்த பெண்ணொருவர், சிசு ஒன்றை வீட்டின் வளவில் கைவிட்டு சென்றுள்ளார். 

குறித்த சிசு நாய் இழுத்துச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்,  அந்த குழந்தையை பிரசவித்த  4 பிள்ளைகளின் தாய் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.05.2020) மாலை கைதுசெய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். 



குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய 21, 17, 14, 11 வயதுகளுடைய 4 பிள்ளைகளின் தயாரான குறித்த பெண்ணின் கணவர் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண், 14 ஆம் கொலனியைச் சோந்த ஒருவருடன் தகாத தொடர்பு வைத்திருந்த நிலையில் பெண் கர்ப்பம் தரித்துள்ளாதகவும் அதற்கான உடலில் எந்தவிதமான  தோற்றப்பாடு காணப்படாத  நிலையில் சம்பவதினமான சனிக்கிழமை (09.05.2020) காலை 9 மணியளவில் வீட்டின் வளவின் 300 மீற்றர் தூரம் கொண்ட பகுதியில் யாருக்கும் தெரியாமல் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்தவராலேயே தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும் அதனை எடுத்துச் செல்லுமாறு கையடக்க தொலைபேசியில் தெரிவித்துவிட்டு அங்கு இரவு 7 மணிவரை காத்திருந்துள்ளார்.

ஆனால் குறித்த நபர், வராத நிலையில் தனது  பிள்ளைகளுக்கு இந்த சிசு பிறந்தது தெரியக் கூடாது என அங்கு பிறந்த சிசுவை கைவிட்டுவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் குழந்தையை கைவிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது குழந்தை காணாமல் போயுள்ளதாலும் சிசு பிறந்து பின் இறந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் கல்லுவாடியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் நாய் ஒன்று இறந்த சிசு ஒன்றின் உடலை இழுத்துச் செல்வதை கண்டு கிராம உத்தியோகத்ததருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த சிசுவின் தலை பகுதியை கொண்ட  உடலை பொலிசார் மீட்டதுடன்  குழந்தையை பிரசவித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19