பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்

Published By: Digital Desk 3

10 May, 2020 | 08:18 PM
image

(ஆர்.யசி)

நாட்டில் சகல அரச  மற்றும் தனியார் நிறுவனங்கள் நாளை தொடக்கம் வழமையான இயக்கத்திற்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ள போதிலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப்போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்து ஏனைய சகல மாவட்டங்களிலும் நாளை தொடக்கம் 14 மணிநேர ஊரடங்கு தளர்க்கப்படுகின்றது.

இவ்வாறு ஊரடங்கு தளர்க்கப்படும் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் வழமையாக இயங்க முடியும், அதேபோல் கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும்  தனியார் நிறுவனங்கள் இயங்க முடியும்.

எனினும் நிறுவன பிரதானிகளின் தீர்மானத்திற்கு அமைய ஊழியர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில் அடுத்த இரண்டு வாரகாலத்திற்கு பொதுப்போக்குவரத்து சேவைகள் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மாத்திரமே செயற்படும் எனவும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சின் மூலமாக எழுத்துமூல அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 வைரஸ் தொற்றிநோய் தாக்கத்தில் இருந்து தவிர்க்க வேண்டுமாயின் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடக்க வேண்டும் என்ற சுகாதார ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார பணிப்பாளர் மூலமாக இவ்வாறான அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிவிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அதற்கமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அமரவீர அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளைய தினத்தில் இருந்து அடுத்த இரண்டு வாரகாலத்திற்கு பத்து புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த புகையிரதங்களில் பயணிக்க 2800 ஊழியர்கள் தம்மை பதிவு செய்துள்ளதுடன் அவர்களுக்கான குறுந்தகவல் உரிய நபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறான குறுந்தகவல் பெற்றுக்கொள்ளாத எவரும் புகையிரதத்தில் பயணிக்க முடியாது என்ற கட்டுப்பாடுகளையும் அமைச்சு விதித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46