கொரோனா வியாபரமும் முடக்கநிலையை நீக்குதலும்

10 May, 2020 | 06:04 PM
image

- சதீஷ் கிருஷ்ணபிள்ளை

உலகெங்கிலும் கொரோனா-வைரஸ் பரவியதை அடுத்து இன்னொரு வார்த்தை முக்கியத்துவம் பெற்றது. இதனை பொதுவாக முடக்கநிலை (Lockdown) என்பார்கள்.

கண்ணுக்குத் தெரியாத நச்சுயிரி. அது பரவாமல் இருப்பதற்காக மக்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பதை மேலோட்டமாக முடக்கநிலை என்பார்கள். இதற்குள் பலதும் அடங்கும்.

ஒரு புவியியல் எல்லைக்குள் மக்களை கட்டாயமாக தனிமைப்படுத்தி வைப்பது முதற்கொண்டு, வீட்டுக்குள் இருங்கள் என்ற வேண்டுதல் அடங்கலாக பல விடயங்களைக் கூறலாம். சில அமைப்புக்களை மூடுதல் ஒன்றுகூடுதலுக்கான தடை போன்றவற்றையும் குறிப்பிடலாம்.

இன்று உலக சனத்தொகையில் மூன்றிலொரு பகுதி மக்கள் ஏதோவொரு விதத்திலான கட்டுப்பாட்டை எதிர்கொள்கிறார்கள். இதன் காரணமாக, மக்கள் மீதும் சமூகங்கள் மீதும் பொருளாதாரத்தின் மீதும் பல பாதிப்புக்கள். கொவிட்-19 முடக்கநிலை என்பது உலகின் மிகப்பெரிய உளவியல் சோதனையென மருத்துவர்கள் விபரிக்கும் அளவிற்கு மோசமான நிலை.

உலகை ஒட்டுமொத்தமாக நோக்கினால் வைரஸ் தொற்றும் மரணங்களும் குறையவில்லை. மாறாக, அதிகரிக்கும் போக்கு தான் தென்படுகிறது. இதனை ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், கட்டுப்பாடுகளைத் தொடர்வது தான் நல்லதென சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இனிமேலும் பொருளாதாரத்தை முடக்கி வைத்தால், நோயினால் விளையும் மரணங்களை விடவும் பட்டினிச் சாவுகள் அதிகரிக்கலாம் என்பது அரசியல் தலைவர்களின் கருத்து. இவ்வாண்டு உலக பொருளாதாரம் மூன்று சதவீதத்தால் வீழ்ச்சி காணுமென சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூருவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இது கயிறு மேல் நடக்கும் வித்தையைப் போன்றது. ஒரு சில நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன. வேறு சில நாடுகள் அடுத்து வரும் நாட்களில் தளர்த்துவது பற்றி ஆராய்கின்றன.

இதில் விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து செயற்படும் நாடுகளும் உள்ளன. தர்க்கரீதியான திட்டங்களின் அடிப்படையில் இயங்கும் நாடுகளும் இருக்கின்றன. எத்தனை நாளைக்குத் தான் மக்களை முடக்கி வைப்பது? வருவது வரட்டும் பார்ப்போம் என்று சிந்திக்கும் தலைவர்களும் உள்ளனர். பக்கத்து நாட்டில் தளர்த்துகிறார்கள் என்பதற்காக, தமது நாட்டிலும் கட்டுப்பாட்டுகளை நீக்கும் தலைவர்களையும் மறக்க முடியாது.

உலகின் மிகப்பெரிய தனிமைப்படுத்தல் சீனாவில் நிகழ்ந்தது. கொரோனா-வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் நகரில் ஜனவரி 23ஆம் திகதி மக்கள் முழுமையாக முடக்கப்பட்டார்கள். ஆறு வார காலம் மக்கள் வெளியே வரவில்லை. வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. வைரஸ் பரவல் உச்சத்தைத் தொட்ட சந்தர்ப்பத்தில், 20 மாநிலங்களில் கட்டுப்பாடுகள். வூஹான் உள்ளிட்ட நகரங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. மக்கள் கஷ்டப்பட்டார்கள். சீனாவின் கடுமையான விதிமுறைகள் காரணமாக, கூடுதலானவர்களுக்கு நோய் தொற்றுவது தவிர்க்கப்பட்டதென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்தது, இதனை அடுத்து, ஏப்ரல் 8ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

ஆகக் கூடுதலான கொரோனா-மரணங்கள் நிகழ்ந்த நாடு அமெரிக்கா. இந்த மரணங்களுக்குக் காரணம், ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் தொலைநோக்கற்ற சிந்தனை. தான்தோன்றித்தனமான செயற்பாடுகள்.

கொவிட்-19 பற்றிய மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தெளிவாக இல்லாத நிலை. இதன் காரணமாக, சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து மாநில ஆளுனர்கள் தீர்மானங்களை எடுக்கின்றன. வீடுகளில் தங்கியிருங்கள் என்ற உத்தரவை இம்மாத நடுப்பகுதி வரை அமுலாக்கும் மாநிலங்கள் அதிகம். சில ஆளுனர்கள் மக்கள் சற்று ஆசுவாசம் அடையட்டுமே என்று கூறி, பூங்காக்களைத் திறக்க அனுமதிக்கிறார்கள். மையப்படுத்திய அணுகுமுறை இல்லாத காரணத்தால் ஒரு குழப்பநிலை நீடிப்பதகாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதற்கிடையில், ஜனாதிபதித் தேர்தல். இதனை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த வேண்டும். தேர்தல் பற்றிய பேச்சுக்கள் குறைவு. சீனாவின் மீதான சாடல்கள் அதிகம்.

ஐரோப்பாவில் ஆகக்கூடுதலான கொரோனா-மரணங்கள் நிகழ்ந்த நாடு பிரிட்டன். இங்கு அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வாங்குவதற்காகவும், உடற்பயிற்சி செய்வதற்காகவும் மாத்திரம் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். 

மரணச்சடங்குகள் தவிர வைபவங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கு மேற்பட்டவர்கள் வெளியிடங்களில் ஒன்றுகூடவும் தடை. கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி பிரிட்டன் பிரதமர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கூடுதலாக எதிர்பார்க்க வேண்டாம் அமைச்சரொருவர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இத்தாலியில் கடந்த திங்கட்கிழமை உணவகங்கள், மதுபான விற்பனை நிலையங்கள், கட்டுமாண வேலைத்தளங்கள், தொழிற்சாலைகள் போன்றவை திறக்கப்பட்டன. அரும்பொருள் காட்சியகங்கள், நூலகங்கள் போன்றவை எதிர்வரும் 18ஆம் திகதி திறக்கப்படும். ஜூன் முதலாம் திகதி சிகை அலங்கார நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. 

இத்தாலி முழுவதிலும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கலாசார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. ஸ்பெயினிலும் ஏறத்தாழ அதே மாதிரி தான். அங்கு கடந்த சனி, ஞாயிறு தினங்களில் பிள்ளைகள் முதற்தடவையாக வெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். அத்தியாவசியம் அற்றவையாகக் கருதப்படும் உற்பத்தி, கட்டுமானம் முதலான துறைகள் சார்ந்த தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப முடிந்தது. எனினும் மதுபான விற்பனை நிலையங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.

ஜெர்மனியில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் சிகை அலங்கார நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், தேவாலயங்கள், அரும்பொருள் காட்சியகங்கள் போன்றவற்றை திறக்க அனுமதிக்கப்பட்டது. சில பாடசாலைகளும் இயங்கின. கடந்த மாதம் 20ஆம் திகதி தொடக்கம் ஜெர்மனியில் சிறிய அளவிலான வர்த்தக நிலையங்கள் இயங்கின. வொக்ஸ்வோகன் நிறுவனத்தின் பிரதான தொழிற்சாலை திறக்கப்பட்டது.

எனினும், ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை ஜெர்மனியில் இருந்து எவரும் உலக நாடுகளுக்கு செல்லக் கூடாதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் முடக்கநிலையை நீக்கும் திட்டங்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. அதனுடன் சேர்க்கப்பட்ட நிபந்தனை முக்கியமானது. பிரான்ஸில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். இந்த சராசரி மூவாயிரத்தை விடவும் குறையும் பட்சத்தில், நாளை தொடக்கம் கடைகளைத் திறக்கலாம் என பிரதமர் அறிவித்தார். எனினும், மதுபான விற்பனை  நிலையங்களுக்கு அனுமதி கிடையாது. ஒவ்வொரு வாரத்திலும் ஏழு இலட்சம் பேரை பரிசோதித்து, சகலருக்கும் முகக்கவசம் கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் இலட்சியமென அவர் கூறினார்.

பொதுப் போக்குவரத்தில் மட்டுப்பட்ட அளவில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். பாடசாலைகள் கிரமமாக திறக்கப்படும். விதிமுறைகளை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

நியூசிலாந்தைப் பொறுத்தவரையில், ஆறு விஞ்ஞானிகள் சமர்ப்பித்த திட்டங்களின் அடிப்படையில் முடக்க நிலையை நீக்குவதற்குரிய ஏற்பாடுகள் அமுலாகின்றன. நியூசிலாந்தில் வைரஸ் தொற்று குறைவு தான். எனினும்ரூபவ் இதனை முற்றாக அழித்து விட முடியாது என்பதைக் கருத்திற்கொண்டு, கட்டுப்பாடுகளை முறையாக தளர்த்துமாறு விஞ்ஞானிகள் யோசனை கூறினார்கள். இல்லாவிட்டால், மக்களின் உளச் சுகாதாரமும்ரூபவ் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என எச்சரித்தார்கள். இதன் பிரகாரம், கடந்த வாரம் தொடக்கம் வேட்டையாடுதல், மீன்பிடித்தல் முதலான பொழுதுபோக்குகளில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றையும் திறக்கலாம். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் முன்கூட்டியே கடுமையான கட்டுப்பாடுகளை அமுலாக்கியதால், அங்கு கொவிட்-19 தொற்று குறைந்திருக்கிறது என நிபுணர்கள் பாராட்டியுள்ளனர்.

அவஸ்திரேலியாவிலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இங்கு சத்திரசிகிச்சைகளை நடத்தவும் பல்மருத்துவ கிளினிக்குகளை ஆரம்பிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடுதலாக பாதிக்கப்பட்ட நியூ சவூத் வேல்ஸ் மாநிலததில் சில கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனைய கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி நேற்று (சனிக்கிழமை) தீர்மானிப்பதாக இருந்தது.

ஈரான் மத்திய கிழக்கில் கூடுதலாக பாதிக்கப்பட்டிருந்தது. தெஹ்ரானில் படிப்படியாக இயல்புநிலை ஏற்படுத்தப்படுகிறது. பல்பொருள் அங்காடிகள் இயங்குகின்றன. வணக்க ஸ்தலங்களும் பள்ளிவாசல்களும் மூடியிருக்கின்றன. ஆபத்தில்லாத பொருளாதார நடவடிக்கைகளை நாளை தொடக்கம் மீண்டும் இயங்க வைக்க அனுமதி கிடைத்துள்ளது.

சவூதி அரேபியாவில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் விலை வீழ்ச்சியால் பொருளாதார பிரச்சனை தீவிரம் பெற்றுள்ளது. இந்த நிலையில்ரூபவ் விமானச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள், பாடசாலைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. நோன்பு காலமென்பதால், காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமுலாகிறது.

புனித நகரங்களான மக்காவும் மதீனாவும் எப்போது திறக்கப்படுமென இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் மார்ச் 24ஆம் திகதி முதலில் அறிவிக்கப்பட்ட முடக்கநிலை, இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், எதிர்வரும் 17ஆம் திகதி வரை இந்தியா முழுவதிலும் தீவிரமான கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும். அங்கு மக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்லத் தடை. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த சகல சேவைகளும், கடைகளும் மூடப்பட்டிருக்கும். சகல கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசியம் அற்றவை என கருதப்படும் அரச-தனியார் போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் மத்திய அரசாங்கம் தெளிவானதொரு கொள்கையைக் கடைப்பிடிப்பதால், அதன் வழி செயற்பட்டு மாநில அரசுகள் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.

மலேசியாவில், பெரும்பாலான வர்த்தக நிலையங்களை நாளை-மறுதினம் (செவ்வாய்க்கிழமை) திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் திறப்பதற்கு அனுமதியில்லை. இங்கு விதிமுறைகள் கடுமையாக அமுலாகின்றன.

இவற்றை மீறியதாக சந்தேகிக்கப்படும் 21ரூபவ்000 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். எல்லைகளை மூடியுள்ள நாடுகளையும் குறிப்பிட வேண்டும். கனடா முக்கியமானது. அங்கு முழுமையான முடக்கநிலை இல்லாவிட்டாலும் வெளிநாட்டவர்கள் கனடா செல்ல அனுமதியில்லை. இந்தக் கட்டுப்பாடுகள் சில வாரங்களுக்கேனும் அமுலில் இருக்குமென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடொவ் குறிப்பிட்டுள்ளார்.

விமான மூலம் மாலைத்தீவிற்கு செல்லும் சகல பயணிகளும் தொடர்ந்து 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாவது அவசியம். வடகொரியாவும் அயல் நாடுகளுக்கான விமான மற்றும் ரயில் சேவைகளை ரத்துச் செய்துள்ளது.

அரசியல் காரணங்களுக்காக ஹங்கேரியையும் போலந்தையும் குறிப்பிட வேண்டும். இரு நாடுகளிலும் கொவிட்-19 கட்டுபாட்டுகளைக் காரணம் காட்டி அரசியல் தலைவர்கள் தேர்தல்களைப் பின்போட்டுள்ளார்கள்.

ஹங்கேரியின் ஜனாதிபதி விக்டர் ஓர்பன் சமீபகாலமாக அதிகாரங்களைத் தம்வசம் குவித்து வருகிறார். அவரது ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் உள்ளதால் நாடாளுமன்றத்தில் சட்டமொன்றை நிறைவேற்றி தேர்தலை காலவரையறை இன்றி பின்போடும் அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இங்கு காலவரையற்ற முடக்கநிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தேர்தலை பின்போடும் அதிகாரம் சம்பந்தமான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

போலந்தில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடந்திருக்க வேண்டும். எனினும் தேர்தலை பின்போடுவதென ஆளும் கூட்டணி தீர்மானித்துள்ளது. இங்கும் அதிகார மோகம் தான். தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் தெரிவாவதை ஆளும் கூட்டணியி;ன் பிரதான கட்சி விரும்புகிறது. அந்தக் கட்சிக்கு தேர்தலை நடத்துவதில் விருப்பம். எனினும்ரூபவ் அந்தக் கட்சி மக்களைப் பற்றி சிந்திக்காமல் அரசியல் செய்கிறது என சிறியதொரு கூட்டணிக் கட்சியும் எதிர்க்கட்சியும் சாடுகின்றன. இந்த சூழ்நிலை காரணமாக போலந்தில் சுகாதார நெருக்கடியுடன் தீவிர அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியுள்ளன.

இந்த கொவிட்-19 வைரஸ் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுத்திய வலி அதிகம். பொருளாதாரங்களின் மீது செலுத்திய தாக்கமும் தீவிரமானது. இருந்தபோதிலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு எது சரியான நேரம் என்பதை எப்படித் தீர்மானிப்பது? விஞ்ஞானபூர்வமாக ஆராயாமல் அரசியல் தலைமைகள் எடுக்கும் அவசரமான தீர்மானங்கள் பெரும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது. முடக்கநிலையைத் தளர்த்தும் எந்தவொரு நடைமுறையும் சரியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பது அவ்வமைப்பின் கருத்தாகும்.

கட்டுப்பாடுகளைத் தளர்த்த, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதனொம் ஆறு நிபந்தனைகளை முன்வைக்கிறார். நோய் பரவல் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் நோயாளியை இனங்கண்டு - பரிசோதித்து – தனிமைப்படுத்தி – சிகிச்சை அளிக்கும் வசதிகளை சுகாதார சேவைகள் கொண்டிருக்க வேண்டும்ரூபவ் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் அபாயம் குறைக்கப்பட வேண்டும், பாடசாலைகள் - வேலைத்தளங்கள் முதலான இடங்களில் போதிய நோய்த் தவிர்ப்பு ஏற்பாடுகள் இருத்தல் அவசியம்  வெளிநாடுகளில் இருந்து எவரும் தொற்றுடன் வந்தால் அதன் விளைவுகளை சமாளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் சமூகங்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வும் வலுவூட்டலும் இருப்பது அவசியம்.

இந்த நிபந்தனைகளை முற்றுமுழுதாக பூர்த்தி செய்வது கடினமான விடயம் என அரசியல் தலைவர்கள் கூறலாம். இருந்தபோதிலும்ரூபவ் தத்தமது நாடுகளின் சூழ்நிலை அறிந்து ஆகவும் பொருத்தமான நிபந்தனைகளையாவது மதித்து நடப்பது சிறந்தது.

கொரோனா-வைரஸின் வியாபகத்தை விஞ்ஞானபூர்வமான அணுகுமுறையின் மூலம் தான் கட்டுப்படுத்த முடியும் என்பதை சமகால உதாரணங்கள் நிரூபிக்கின்றன. கட்டுப்பாடுகளைத் தளர்த்தி முற்றுமுழுதாக பழைய வாழ்க்கைக்குத் திரும்புதல் என்பதை கொவிட்-19 சாத்தியமாற்றதாக செய்துள்ளது. புதிய இயல்புநிலை என்பது வேறுபட்டதாக இருக்கும். சில நடவடிக்கைகளை இயல்பாக மீண்டும் ஆரம்பிப்பது சாத்தியமாகலாம்.

அதன்மூலம் பரவலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதா என்பதை அரசுகள் கண்காணிக்கலாம். ஆனால்ரூபவ் முக்கியமான கேள்விகள் இருக்கின்றன. கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களில் எத்தனை பேரை முழுமையாக பராமரிக்கும் ஆற்றல் அரசாங்கத்திற்;கு உண்டு என்ற கேள்வி முக்கியமானது. இன்று பல நாடுகள் தடுப்பூசிகளைத் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்தத் தடுப்பூசிகள் எவ்வளவு சீக்கிரமாகக் கிடைக்கும் என்பதும் முக்கியமானது. ஒரு அரசு கட்டுப்பாட்டைத் தளர்த்துகிறது என்றால், எவ்வளவு தூரம் வரை செல்லலாம் தோல்வி கண்டால் அதே இடத்திற்குத் திரும்ப முடியுமா என்பதில் அரசுகள் நேர்மையாக இருக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04