சுமந்திரனை நான் விமர்சிப்பதாக போலியான செய்திகளை பரப்புகின்றனர் - விளக்கமளிக்கிறார் ஹக்கீம்

Published By: J.G.Stephan

10 May, 2020 | 02:16 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் தங்களது இயலாமையை மறைப்பதற்காகவே முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதற்கு எதிராக நண்பன் சுமந்திரன் எடுத்திருக்கும் முயற்சியை நான் விமர்சித்து வருவதாக போலி செய்திகளை பரப்பி வருகின்றனர்.

அத்துடன் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் ஊடாக நியாயத்தை பெற்றுக்கொள்வதற்கு  சிறிலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை தான் விமர்சித்துவருவதாக முகநூலில் பதிவாகியுள்ள போலியான செய்திக்கு விளக்கமளிக்கும் வகையில் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பது சம்பந்தமாக இந்த அரசாங்கம் பிடிவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்று அதனை சவாலுக்குட்டுத்துகின்ற முயற்சியில் ஒருசில சகோதரர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த விவகாரத்தை தன்னுடைய கையில் எடுத்திருக்கின்றது. 

அதேநேரம் இந்த வழக்கொன்றில் என்னுடைய நண்பன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்வந்து, எந்த ஊதியமும் பெறாமல் வழக்கில் ஆஜராகுவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்ற நிலையில், வேண்டுமென்று எமது கட்சிக்கு எதிரான ஒருசாரார் தங்களுடைய வங்குரோத்து அரசியலை அடிப்படையாகவைத்து, நண்பன் சுமந்திரன் இந்த விடயத்தில் தலையிடுவதை நான் விமர்சித்ததாக தெரிவித்து முகநூல் பதிவொன்றை போலியாக இட்டு அவர்களது வங்குரோத்து நிலைமையை காட்டி நிக்கின்றது.

நண்பன் சுமந்திரன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சிறந்த உறவைப்பேணிவரும் ஒரு அரசியல்வாதி மத்திரமல்ல. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல விவகாரங்களில் குறிப்பாக சிறுபான்மை இனங்கள் சகோரத்துவத்துடன் செயற்படவேண்டும்.

இந்த நாட்டு அரசியலிலே எம்மவருக்கு எதிராக எவ்வாறான சவால்கள் வந்தாலும் இயன்றவரை நாங்கள் ஒன்றாக இருந்து போராட வேண்டும் என்ற கொள்கையில் பயணிப்பவர்கள்.

இந்த நிலையில் சகோதரர் சுமந்திரன் எடுத்திருக்கும் முயற்சியை நாங்கள் எல்லோரும் மனதார பாராட்டவேண்டுமே ஒழிய, இவ்வாறு தங்களது வங்குரோத்து அரசியலுக்காக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்துவதற்காக செய்கின்ற நடவடிக்கையை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.

அத்துடன் இந்த விடயத்தை ஆரம்பத்திலே வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவன் என்ற அடிப்படையிலே இது சம்பந்தமாக நாங்களும் நீதிமன்றம் கொண்டு சென்று அதனூடாக நியாயம் கேட்பதற்கு  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேலும் இந்த விவகாரத்தில் நண்பன் சுமந்திரன்  எந்த ஊதியமும் பெறாமல் ஒரு வழக்கறிஞராக முன்வந்திருப்பது, இரு சமூகங்களுக்கிடையில் இருக்கின்ற சகோதர உணர்வை மாத்திரமல்ல, நியாயம் கேட்டு போராடுகின்ற விவகாரத்திலே நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியை உரத்துச்சொல்கின்றது.

இந்த பின்னணியிலே முஸ்லிம்களும் தமிழர்களும் மாத்திரமல்ல, நியாயமாக சிந்திக்கின்ற சிங்கள, பெளத்தர்களும் கூட முஸ்லிம்களின் உணர்வு ரீதியான இந்த விவகாரத்திலே, அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநியாயம் குறித்து ஒன்றாக குரல் எழுப்பவேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கின்றது.

எனவே இந்த விடயத்திலே நீதிமன்றம் ஊடாக நியாயத்தை பெறுகின்ற முயற்சியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருக்கின்றது.

அந்த வழங்குகளிலே நாங்களும் பங்குகொள்கின்றோம். இந்த நிலையில் சகோதரர் சுமந்திரனை நான் விமர்சிப்பதாக போலியான செய்திகளை பரப்புகின்ற, இந்த அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கின்ற ஒருசில ஒட்டுண்ணி கட்சிகள் தங்களுடைய வங்குரோத்து அரசியலுக்கு வேறு வழியில்லாமல் தங்களது இயலாமையை மறைப்பதற்காக செய்கின்ற இந்த ஈனச்செயலையிட்டு கவலையடைக்கின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50