இலங்கை - இங்கிலாந்து மோதிய மூன்றாவது போட்டி கைவிடப்பட்டது

Published By: Ponmalar

27 Jun, 2016 | 12:43 PM
image

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவுபெற்றது.

நேற்று (26) பிரிஸ்டோலில் இடம்பெற்ற இந்த போட்டியில் மழைக்குறுக்கிட்டதன் காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியினர் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கட்டுகளை இழந்து 248 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குசல் பெரேரா 9 ஓட்டங்களுடனும் குணதிலக்க 1 ஓட்டத்தோடும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தனர். 

எனினும் அடுத்ததாக களமிறங்கிய மென்டிஸ் 53, சந்திமால் 62, அணித்தலைவர் மெத்தியுஸ் 56 மற்றும் தரங்க 40 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை 248 ஆக உயர்த்தினர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் பிளங்கட் மற்றம் வோர்க்ஸ் தலா 3 விக்கட்டுகளை விழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கட்டினை இழந்து 16 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழைக்குறுக்கிட்ட காரணத்தால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

எனினும் மழை விடாமல் தொடர்ந்து பெய்த காரணத்தால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35