முன்னாள் சபாநாயகர் தலைமையில் நாளை கூடுகிறது அரசியலமைப்பு பேரவை !

Published By: Vishnu

10 May, 2020 | 12:15 PM
image

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளைய தினம் அரசியலமைப்பு பேரவை சிறப்புக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இக் கூட்டமானது நாளை மாலை 4.30 மணிக்கு முன்னாள் சபாநாயகரின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதுடன், இதில் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா நெருக்கடி, தேர்தல் தொடர்பான அறிவிப்பு மற்றும் பாராளுமன்ற‍ை கூட்டுமாறு முன்வைக்கப்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இந்த அரசியலமைப்பு பேரவைக் கூட்டமானது இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பு பேரவை கூட்டமானது இறுதியாக ஏப்ரல் 23 ஆம் திகதியன்று கூடியது. பாராளுமன்றம் கலைக்கப்பட் நிலையிலும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, பொதுத் தேர்தல் நடைபெற்று புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரையில் தலைவராக செயற்படுவார்.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்துக்கு அமைய, பொலிஸ் ஆணைக்குழு, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழு போன்ற சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் பொறுப்புவாய்ந்த அமைப்பு அரசியலமைப்பு பேரவையாகும். 

அரசியலமைப்பு பேரவையின் தலைமை பதவியை சபாநாயகர் வகிக்கும் அதேவேளை, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் ஏனைய 10 உறுப்பினர்களுள் உள்ளடங்குகின்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.சம்பந்தன், பிமல் ரத்நாயக்க, மஹிந்த சமரசிங்க மற்றும் தலதா அத்துகோரள மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஜாவேத் யூசுப், நாகானந்தா செல்வகுமாரன் மற்றும் டாக்டர் ஜெயந்த தனபாலா ஆகியோர் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களாவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38