ஊரடங்கு நீங்கினாலும் மதுபானசாலைகள் திறக்கப்படாது.!

Published By: J.G.Stephan

09 May, 2020 | 09:09 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

எதிர்வரும் திங்கட்கிழமை முதல்  பொது மக்களின் அன்றாட வாழ்வை வழமைக்கு கொண்டுவர 21 மாவட்டங்களில் ஊரடங்கு நிலைமையை நீக்கவும், மேல் மாகாணம் , புத்தளத்தில்  அரச தனியார் நிறுவனங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என மது வரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. 



 

ஊரடங்கு நிலைமையின் கீழ், மதுபானசாலைகள் மூடப்படவில்லை எனவும், மதுபானசாலைகளை மூட  தனியான  கட்டளை  ஊடாகவே  நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய மது வரித் திணைக்கள ஊடகப் பேச்சாளர், பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க, அதனால்  ஊரடங்கு நீங்கினாலும்  மதுபானசாலைகளை திறக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என  குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சமூக இடைவெளியை பேணவும், சமூக பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும் மதுபானசாலைகளை திறக்க அரசாங்கம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் அந்த தடையை நீக்குவதா இல்லையா என்பது குறித்து இன்று வரை இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும்  அது குறித்த இறுதி முடிவை எடுக்க எதிர்வரும் 15 ஆம் திகதி விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01