விஷால் வரலட்சுமியுடன் நெருங்கி இருப்பதுபோன்ற புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

விஷாலும், வரலட்சுமியும் காதலர்கள் என்று சினிமா வட்டாரத்திலும், மீடியா வட்டாரத்திலும் ஒரு செய்தி அடிப்பட்டு வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி வருவதும், விஷால் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு லட்சுமி இருப்பார் என்று கூறியதும் இவர்கள் காதலர்களாகதானோ என்ற ஒரு மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வரலட்சுமியுடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் எல்லாமே சொல்லும் என்று டுவிட்டும் போட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்களும், சக நடிகர்களும் விஷால், வரலட்சுமியை திருமணம் செய்துகொள்ளப் போவதைத்தான் இப்படி சூசகமாக தெரிவித்துள்ளதாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், விஷால் தரப்பில் இருந்தோ, வரலட்சுமி தரப்பில் இருந்தோ இதற்கு எந்தவொரு பதிலும் வரவில்லை. இவர்கள் மௌனம் சாதிப்பதால் கிட்டத்தட்ட தங்கள் திருமணத்தை உறுதி செய்து கொண்டார்களோ என்ற சந்தேகமும் கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பரவி வருகிறது. எது, எப்படியோ கூடிய விரைவில் இதுகுறித்து உறுதியான தகவல்களை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.