காத்தான்குடி 'சியாத் கார்டன்' இல் சஹ்ரான் பெண்களுக்கு அடிப்படைவாத போதனை : உரிமையாளரிடம் வாக்குமூலம்

Published By: J.G.Stephan

08 May, 2020 | 10:27 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின்  மூளையாக செயற்பட்டதாக நம்பப்படும் பயங்கரவாதி, சஹ்ரான் ஹஷீம், பெண்களுக்கு அடிப்படைவாதத்தை போதிக்கவும் பயிற்சியளிக்கவும் பயன்படுத்தியதாக நம்பப்படும்  இடமொன்று இன்று காத்தான்குடி, பாலமுனை - கர்பலா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகள் சிலரின் மனைவிமாருக்கும், மேலும் சிலருக்கும் இங்கு இவ்வாறு அடிப்படைவாத, ஏனைய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து,  சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் இன்று அவ்விடத்தை சுற்றி வளைத்து சோதனை நடாத்தியுள்ளனர்.



மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரம் குறித்த பொலிஸ்  சி.ஐ.டி. விசாரணையில்,  சி.ஐ.டி. தடுப்பில் உள்ள சந்தேக நபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது,  வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி குறித்த சந்தேக நபரையும் அழைத்துக் கொண்டு காத்தான்குடி, பாலமுனை - கர்பலா பகுதியில் உள்ள ' சியாத் கார்டன்' எனும்  குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்த சி.ஐ.டி. மற்றும் விசேட பாதுகாப்பு படை அதிகாரிகள் அவ்வளாகம் முழுவதும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தினர்.

குறித்த ஹோட்டலின் தற்போதைய உரிமையாளரையும் முன்னாள் உரிமையாளரையும் சி.ஐ.டி.யினர் விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ள நிலையில் அவர்களிடம் விஷேட வாக்கு மூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த ஹோட்டலில் பெண்களுக்கு அடிப்படைவாதம் போதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04