சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாக்களுடன் 4 பேர் கைது !

Published By: Vishnu

08 May, 2020 | 04:23 PM
image

(செ.தேன்மொழி)

கல்கிஸ்ஸ, மொரந்துட்டுவ மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாக்களுடன் இளைஞர்கள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களுக்கிடையிலான இடைவெளியை பேணுவதற்காக பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் மீள் அறிவிக்கும் வரையில் மதுபான சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பொலிஸார்  சந்தேக நபர்களை கைது செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட் பொல்கொட ஆற்றுப்பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது மதுபான வடிவத்தலுக்கா பயன்படுத்தும் கோடாக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்இஇவரிடமிருந்து 4 இலட்சத்து 20 ஆயிரம் மில்லி லீட்டர் கோடாவும்இமதுபான வடித்தலுக்காக பயன்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை மொரந்துட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது 10 இலட்சத்து 32 ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கோடாவுடன்இ 55 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்வத்த வனப்பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இளைஞர்கள் இருவர் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

ஜா-எல பகுதியைச் சேர்ந்த 25, 26 ஆகிய வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ இவர்களிடமிருந்து  2 இலட்சத்து 36 ஆயிரத்து 250 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானம்இ 9 இலட்சத்து 84 ஆயிரத்து 375 மில்லி லீட்டர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41