ருவாண்டாவில் தொடரும் பலத்த மழை ; 65 பேர் பலி, பல வீடுகள் சேதம் !

Published By: Vishnu

08 May, 2020 | 03:46 PM
image

ருவாண்டாவில பெய்த பலத்த மழைக் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 65 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மைய வாரங்களாக தொடரும் மழைக் காரணமாக கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பலத்த மழையினால் ருவாண்டாவில் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுத்துள்ளனர்.

இது குறித்து ருவாண்டாவின் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கக்கென்கே, நியாபிஹு, முஹாங்கா, முசான்சே, நொகோரெரோ, ருலிண்டோ மற்றும் ரூபாவு உள்ளிட்ட மாவட்டங்கள் மழை மற்றும் வெள்ளத்தினால் பேரழிவுக்கு முகங்கொடுத்துள்ளன.

வெள்ளம் காரணமாக 65 பேர் உயிரிழந்து்ளனர். மழையால் வீதிகள், 91 வீடுகள் மற்றும் ஐந்து பாலங்கள் சோதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதாவது.

கிழக்கு ஆபிரிக்கா முழுவதும் உள்ள நாடுகள் அண்மைக்  காலமாக தொடரும் பலத்த மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில், பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக கடந்த மாதம் முதல் சுமார் 194 பேர் உயிரிழந்துள்ளதுடன், விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் உகண்டாவின் விக்டோரியா ஏரி நிரம்பி வழிகிறது, வீடுகள், ஒரு மருத்துவமனை மற்றும் பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனிடையே சோமாலியாவிலும் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, கடந்த மாதம் வடகிழக்கு பன்ட்லேண்டில் 6 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17