ஆட்டம் கண்ட பங்குச்சந்தை! சர்வதேச சந்தையில் ஒரே நாளில் 2 இலட்சம் கோடி டொலர்கள் இழப்பாம்

Published By: Robert

27 Jun, 2016 | 10:18 AM
image

ஐரோப்­பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளி­யே­றி­யதன் கார­ண­மாக சர்­வ­தேச சந்­தை­களில் 2 இலட்சம் கோடி டொலர் அள­வுக்கு நஷ்டம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. தவிர பவுண்ட் நாணய மதிப்பு 31 வரு­டங்­களில் இல்­லாத அள­வுக்கு சரிந்­தி­ருக்­கி­றது. 1985ஆ-ம் ஆண்­டுக்கு பிறகு அதிக சரிவை இப்­போது பவுண்ட் சந்­தித்­தி­ருக்­கி­றது.

ஐரோப்­பிய சந்­தை­களில் கடும் சரிவு இருந்­தது. பிரான்ஸ் பங்குச் சந்தை 8 சத­வீ­தமும், ஜேர்­மனி சந்தை 7 சத­வீ­தமும், இத்­தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடு­களின் சந்­தையும் கடும் சரிவை சந்­தித்­தன. லண்டன் எப்­.டி.­எஸ்.ஈ. சந்தை 3.2 சத­வீதம் சரிந்­தது. அமெ­ரிக்க சந்­தை­யான டவ் ஜோன்ஸ் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 3 சத­வீதம் அள­வுக்கு சரிந்­தது.

தேவை­யான சம­யத்தில் நிதி உதவி செய்ய தயா­ராக இருப்­ப­தாக பேங்க் ஒப் இங்­கி­லாந்து, ஐரோப்­பிய மத்­திய வங்கி, மற்றும் சீனாவின் மத்­திய வங்கி ஆகி­யவை தெரி­வித்­தி­ருக்­கின்­றன. சர்­வ­தேச அளவில் பங்குச் சந்­தைகள் சரிவு கார­ண­மாக முத­லீட்­டா­ளர்கள் தங்கம் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்

பிரிட்டன், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவாகியுள்ள அமெரிக்கா, வளர்ந்து வரும் இந்தியா உட்பட 52 நாடுகளை ஆண்டிருக்கிறது என்பது வரலாறு.

இத்தகைய மாபெரும் வரலாறு கொண்ட இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு முடிவு செய்திருக்கிறது. அவ்வாறு வெளியேறலாமா வேண்டாமா என தனது நாட்டு மக்களிடமே வாக்கெடுப்பு நடத்தியதில், வெளியேறுவதை ஆதரித்து அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1945–-57 ஆகிய காலகட்டங்களில் தொழில் மற்றும் வர்த்தகம் தொடர்பான கூட்டமைப்பாக, ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணையத் தொடங்கின. இங்கிலாந்து, ஜேர்மன், இத்தாலி மற்றும் கிரீஸ் உட்பட 28 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக உள்ளன.

அந்த நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம், தொழில் கொள்கைகளை வகுத்து அதற்கேற்ப ஒன்றிணைந்து ஒரே கூட்டமைப்பாக செயற்படுகின்றன. யூரோ என்ற பொது நாணயமாக, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பயன்படுத்துகின்றன, ஒரே ஒரு நாட்டைத் தவிர. ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளின் மக்கள், ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குள் விசா இன்றி பயணம் செய்யவும், எந்த நாட்டிலும் தங்கி பணியாற்றவும் முடியும்.

ஆரம்பத்திலிருந்தே, ஐரோப்பிய யூனியனில் இருந்து தனித்து செயற்படுவதை இங்கிலாந்து வழக்கமாக வைத்திருந்தது. எனவேதான் யூரோ நாணயத்தை ஏற்காமல் தன்னுடைய பவுண்ட் நாணயத்தையே பயன்படுத்தி வந்தது.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், வலுவான நாடுகள் என்று பார்த்தால் இங்கிலாந்து, ஜேர்மனி, உள்ளிட்ட சில நாடுகள் உள்ளன. இவை தவிர பிற நாடுகளில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகளோ, தொழில் வளமோ, வளர்ச்சியோ இல்லை. இந்த நிலையில் இந்த நாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சுமையையும் சுமக்க வேண்டியிருந்தது.

பிரிட்டனில் கணிசமான தொழில் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் இருப்பதால் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் ஐரோப்பிய யூனியனில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பல நாடுகளில் இருந்தும் மக்கள் பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இதனால் பிரிட்டனின் சொந்த மக்களுக்கு அவர்களுடைய நாட்டிலேயே வேலைவாய்ப்புகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் பிரிட்டிஷ் மக்கள், வெளிநாட்டினர் தங்களுடைய வாய்ப்புகளைப் பறிப்பதை விரும்பவில்லை. இதன் விளைவுதான் பிரிட்டனின் வெளியேற்றம்.

இங்கிலாந்து பிரதமராக கமரூன் பதவி ஏற்ற பிறகு, கடந்த பெப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த விவாதம் தொடங்கியது. அப்போதே அதற்கான வாக்கெடுப்பு ஜூன் 23ஆம் திகதி என்று குறிக்கப்பட்டது. அதன்படி கடந்த 23ஆம் திகதி வாக்கெடுப்பு நடந்தது.

இதில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவு தெரிவித்து, பிரிட்டிஷ் வாக்காளர்கள் 1 கோடியே 57 இலட்சம் பேர் வாக்களித்திருக்கின்றனர். இறுதியாக பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெற்றிகரமாக வெளியேறிவிட்டது. அது எதிர்பார்த்த விடுதலையை அடைந்துவிட்டது.

51.8 சதவிகிதம் பிரிட்டிஷ் மக்கள் வெளியேறலாம் என்றும், 48.2 சதவிகிதத்தினர் வெளியேற வேண்டாம் என்றும் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவிகிதம் வித்தியாசம் மிகக்குறைந்த அளவே இருந்தாலும், பெரும்பான்மை அடிப்படையில் பிரிட்டிஷ் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

பிரிட்டனின் இந்த வெற்றி யாருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தியாக இல்லை. ஐரோப்பிய கூட்டணியில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் அந்த நாடுகளுக்கிடையில் மிகப்பெரிய வர்த்தக மற்றும் பொருளாதார இடைவெளி உருவாகும். மேலும் நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சினை, புலம்பெயர்ந்தவர்கள் பாதிப்பு, பாதுகாப்பு போன்ற பல பிரச்சினைகள் உருவாகும்.

மேலும் நாணய பரிமாற்றத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து இந்திய சந்தையில் செய்யப்படும் முதலீட்டு அளவுகள் கடுமையாகப் பாதிக்கப்படும். உலக நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில் உலகச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. ஆசியச் சந்தைகள் அனைத்தும் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58