குரக்கன் மாவில் செய்த உணவு வகை­களை உண்டு பழக்­கப்­பட்ட தனக்கு பாம்­பு­க­ளுடன் அப்பம் சாப்­பிட்டு பழக்கம் இல்­லை­யென முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

குரு­ணாகல் குளி­யாப்­பி­ட்டி­யில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

குரக்கன் மாவில் செய்த உணவு வகை­ களை உண்டு பழக்­கப்­பட்ட எனக்கு பாம்­பு­க­ளுடன் அப்பம் சாப்­பிட்டு பழக்கம் இருக்­க­வில்லை. அவ்­வாறு என்­னுடன் அப்பம் சாப்­பிட்ட பாம்­பு­களை அடை­யாளம் காண முடி­யாது போன­மையே எனது வீழ்ச்­சிக்கு முக்­கிய கார­ண­மா­னது.

அத்­துடன் நான் ஆரம்­பித்து வைத்த மஹிந்­தோ­தய திட்­டங்­களில் இருந்த பெயர் பதா­கைகள் அகற்­றப்­பட்­டுள்­ளன. பெயர் மாற்­றப்­ப­டு­வது குறித்து கவ­லை­யில்லை. ஆனால் அந்த வளங்­களை மாண­வர்­களின் பாவ­னைக்கு சீர­மைத்து கொடுக்க வேண்டும். அத்­துடன் குரு­ணாகல் மல்­லி­யத்­தேவ பாட­சா­லைக்கும் மஹிந்த மன்­றத்தின் கீழ் எனது சொந்த செலவில் நீச்சல் தடாகம் அமைத்­துக்­கொ­டுத்­தி­ருந்தேன். அதனை அர­சாங்க தரப்­பினர் அறி­யாமல் இல்லை. ஆனால் எனக்கு திறப்பு விழா­விற்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்த அர­சாங்­கத்­தினால் பழிவாங்கல் முயற்சிகளுக்காக எம்மை சிறையில் அடைக்க முடியும். ஆனால் மக்கள் மனங் களை சிறையிலடைக்க முடியாது என தெரி வித்துள்ளார்.