2 காலாண்டுகளுக்கான இறைவரியை விலக்களிக்க வேண்டும் என்கிறார் ஜனகன்

Published By: Digital Desk 3

08 May, 2020 | 02:40 PM
image

“சில்லறை வியாபாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. எந்தவிதமான வருமானமும் அற்றுள்ள இந்த தொழில் முயற்சியாளர்கள் தங்களுடைய வாடகையைக் கொடுக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள். இவர்களுடைய பிரச்சினையை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்” என, ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரான கலாநிதி வி. ஜனகன், வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

“என்னால் ஏப்ரல் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், வீடு மற்றும் வர்த்தக கட்டட உரிமையாளர்கள் தங்களுடைய வாடகைதாரர்களிடம் இருந்து வாடகையை, இந்த ஊரடங்கு வேளையில் நியாயமான அடிப்படையில் வாங்க வேண்டும்.

மேலும் இதற்கு அரசாங்கம் உரிய ஒழுங்கு ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன். அரசு இப்பொழுது அதற்கான ஒரு வேண்டுகோளை வீட்டு உரிமையாளர்களிடம் விடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. 

“வீட்டு உரிமையாளர்கள் இக்கால சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை மனிதாபிமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.  வாடகைதாரரும் இந்தக் கால சூழ்நிலையில் முறைப்படி வீட்டு உரிமையாளர்களிடம் பேசி சுமூகமாக வாடகைக் கொடுப்பனவு கால எல்லையைத் திட்டமிட வேண்டும். 

“இதேவேளை, இந்தக் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் உள்ள சில்லறை வியாபாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளன. இவர்களில் பலர் வாடகைக் கட்டடங்களில் தான் தமது தொழில் முயற்சிகளை நடாத்திவருகிறார்கள்.

இன்று எந்தவிதமான வருமானமும் அற்றுள்ள இந்த தொழில் முயற்சியாளர்கள் தங்களுடைய வாடகையைக் கொடுக்கமுடியாமல் தடுமாறுகிறார்கள். அரசாங்கம் இவர்களுடைய பிரச்சினையைக் கவனத்தில் எடுத்துக் குறைந்தது ஆறு மாதங்களுக்காவது வாடகையில் 50% மட்டும் கொடுப்பதற்கான ஒரு ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். 

“கட்டடங்களைத் தொழில் நிறுவனங்களுக்கு வாடகைக்கு வழங்கியவர்கள் இந்தச் சூழ்நிலையைக் கவனத்தில் எடுத்து வாடகை பெறும்போது மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அரசாங்கம் இக்காலகட்டத்தில் வர்த்தக கட்டடங்களுக்கான இரண்டு காலாண்டுகளுக்கான இறைவரியை விலக்கழிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” என அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30