ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 5 பேர் கைது

Published By: Digital Desk 3

08 May, 2020 | 01:15 PM
image

(தி.சோபிதன்)

யாழ்ப்பாணம் கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஐந்து பேரைகோப்பாய் பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நேற்று (7.05.2020) கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழுபகுதியில் மே மாதம் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில்  தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த பணம் நகை  சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய  குற்றச்சாட்டின் பேரில் கோப்பாய் பொரிஸாருடன் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து  திருட்டில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய வாள், கோடரி  திருடிய நகைகளை அடகு வைத்ததற்கான சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள்,2 சைக்கிள்கள்,4 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 2.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் 20 தொடக்கம் 35 வயதுடைய இளவாலை, மல்லாகம் ,உடுவில் பகுதியைச் சேர்ந்தவர்கள்  என்றும் கைது செய்யப்பட்டவர்கள விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது நடவடிக்கைகள் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வீரசிங்க,மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரான்சிஸ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09