தண்டவாளத்தில் நித்திரையிலிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து : 16 பேர் பலி - இந்தியாவில் சம்பவம்

Published By: Digital Desk 3

08 May, 2020 | 11:20 AM
image

இந்தியாவில் மகாராஷ்டிரம் மாநிலம் அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் நித்திரையிலிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 16 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி முதல் இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இதையடுத்து மாநிலங்களுக்கு இடையேயான பஸ் சேவை, அஞ்சல் மற்றும் ரயில் சேவைகள், விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதனால் பல மாநிலங்களில், நகரங்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். 

இதனிடையே சில நகரங்களில் சிக்கித் தவித்து வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கான பயணத்தைத் ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியாவில் முதல் இடத்தில் இருந்து வரும் மகாராஷ்டிரத்தை தவிர்த்து, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி ரயில் தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளனர். 

வெகுநேரம் நடந்ததில் சோர்வடைந்த தொழிலாளர்கள் அனைவரும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் எந்த ரயிலும் வராது என்று நினைத்து அவுரங்காபாத் அருகே ரயில் தண்டவாளத்தில் படுத்து நித்திரை செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அந்த வழித்தடத்தில் சரக்கு ரயில் பயணித்துள்ளது.

ரயில் சத்தம்கேட்டு அவர்கள் சுதாகரித்து நித்திரையில் இருந்து எழுவதற்குள் சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது. இந்த கோர விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மே முதலாம் முதல் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில்,

மஹாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசியுள்ளேன். அவர், சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17