டென்னிஸிற்கு பெரும் இழப்பு - கவலையில் நடால்

Published By: J.G.Stephan

07 May, 2020 | 03:36 PM
image

2020 ஆம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரரான ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக டென்னிஸ் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரெஞ்ச் பகிரங்க போட்டி செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பகிரங்க போட்டி நடைபெறுமா? என்ற கேள்வியும் உள்ளது. மேலும் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர்களும் நடைபெறுமா? என்ற கேள்விக்குறியுடன் உள்ளன.



இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டென்னிஸுக்கு மிகப்பெரிய இழப்பு. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் டென்னிஸ் போட்டி மீண்டும் ஆரம்பமாகும் என நம்புவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  நடால் கூறுகையில் ,

‘‘டென்னிஸ் போட்டிகள் முடிந்தளவுக்கு விரைவாக ஆரம்பமாகும் என நம்புகிறேன். ஆனால், ஒவ்வொரு வாரமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு செல்வது, ஹோட்டலில் தங்குவது, விமான நிலையம், ஏனைய பகுதிகளுக்கு செல்வது குறித்து யோசிக்கிறேன்.

2021 ஜனவரிக்குள் இயல்பு நிலைக்கு திரும்பி, போட்டிகளை வழக்கம்போல் நடத்தலாம் என்று உத்தரவாதம் கொடுத்தால் கண்ணை மூடிக்கொண்டு போட்டிகளில் விளையாடுவதற்கு கையெழுத்திட தயாராகவுள்ளேன்.

இந்த ஆண்டு  நடைபெறவுள்ள டென்னிஸ் தொடர்களை விடவும், அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியை அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். டென்னிஸ் இந்த 2020 ஆண்டை இழந்து விட்டதாகவே பார்க்கிறேன்’’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35