சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரையலாம் ! -

Published By: Priyatharshan

07 May, 2020 | 01:44 PM
image

நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள  ஊரடங்குச்சட்டத்தை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் கட்டுப்பாடுகளுடன் தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

அதிபாதுகாப்பு வலயமாகக் கருதப்படும் மாவட்டங்களில் உள்ள மக்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இந்த தளர்வு காலத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது பணிகளை ஆரம்பிக்க முடியும். ஆனால் நிறுவனத் தேவைகளை கருத்தில்கொண்டு ஆளனியை தீர்மானிக்கலாம்.

மேலும், பொது இடங்களில் ஒன்றுகூடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்பதில் உறுதியான முடிவில்லை.

கடந்த பல வாரங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த மக்களுக்கு, அரசின் இந்த அறிவிப்பு நிச்சயம் ஆறுதலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கொரோனா தாக்கம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுள்ளது. பொருளாதார ரீதியாக மக்கள் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். பலர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வையடுத்து, அவர்கள் தமது முயற்சிகளில் வேகமாக நகர எத்தனிக்கலாம். இருந்த போதிலும் அவதானமாக தமது கருமங்களை மேற்கொள்வது அவசியம்.

சுகாதார விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமது பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வதன் மூலமே தம்மையும்,  தமது குடும்பத்தையும் கொரோனாவின் பிடியிலிருந்தும் பாதுகாக்க முடியும். அந்த வகையில் “ சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் ” என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22