சதிக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நளின் பண்டார

06 May, 2020 | 08:16 PM
image

 (செ.தேன்மொழி)

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மீது திட்டமிட்ட சேறுபூசல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இந்த சதிக்கார்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கடந்தகாலங்களில் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் மீது திட்டமிட்ட சேறுபூசல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. திட்டமிட்ட குழு வொன்றே இந்த சதி திட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றது.

இந்த சேறு பூசல்கள் தற்போது எனக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனக்கு சொந்தமான வீடொன்றை பராமாரிக்கும் பொறுப்பை அந்த வீட்டில்  அயலில் வசிக்கும் நபரொருவரிடம் ஒப்படைந்திருந்தேன்.

அவர் கடந்தசில தினங்களுக்கு முன்னர் மதுபான விவகாரம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் சென்றுள்ளார். இதனுடன் தொடர்புபடுத்தி என்னையும் மதுபான கடத்தல் காராக சித்தரித்து வருகின்றனர்.

அரசியல் இலாபம் கருதி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த செயற்பாட்டில் யார் ஈடுப்பட்டுள்ளார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால், பிரபல மதுபான கடத்தல்காரர்களும் வர்த்தகர்களுமே பங்குக் கொண்டுள்ளனர்.

இந்த குழுவினர் இணைந்து முகப்புத்தகம் மற்றும் இணைத்தளத்தினூடாக என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குருணாகலை பகுதியில் உள்ள எனது வீடொன்றை வைத்தியர்கள் தங்குவதற்காக வழங்கியுள்ளேன்.

இதற்கு குறித்தபகுதியின் நகரசபை தவிசாளரினால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது என்மீது கொண்ட வெறுப்பினால் வெளிவந்த முதல் சதி திட்டமாகவும் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

நாங்கள் அரச நியமணங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து நீங்கியே இரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. அதனால் எம்மீது இவ்வாறு திட்டமிட்ட சேறு பூசல்களை மேற்கொண்டுவரும் நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வோம். இதேவேளை இந்த கடத்தல் காரர்கள் யார்  என்பது தொடர்பில் மக்கள் நன்கறிந்துள்ளனர். அதனால் அவர்கள் புத்திசுயாதீனத்துடன் செயற்படுவார்கள் என்று நான் கருதுகின்றேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44