மக்கள் நம்பிக்கை வைக்கலாம் ! நாடளாவிய ரீதியில் 11 ஆம் திகதி ஊரடங்கை தளர்த்த முடியும் - அரசாங்கம்

06 May, 2020 | 07:35 PM
image

(ஆர்.யசி)

எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்த சாத்தியங்கள் அதிகம் உள்ளது. எனவே திங்கட்கிழமை தொடக்கம்  வழமையாக செயற்படுத்துவது குறித்து மக்கள் நம்பிக்கை வைக்கலாம் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன கூறினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சலுகைகளை வழங்கும் வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும் முன்னெடுக்காத வகையில் பல சலுகைகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றோம்.

அத்துடன் கொவிட் -19 வைரஸ் பரவல் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகள் மூலமாக மிக சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட அச்றுத்தல் என கருதிய பிரதேசங்களில் கூட கொவிட் -19 வைரஸ் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள காரணத்தினால் சமூக பரவல் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

எவ்வாறு இருப்பினும் சுகாதார அதிகாரிகளின் முழுமையான ஆலோசனைகளை தொடர்ந்தும் பின்பற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாம் கொரோனாவுடன் வாழ்ந்துகொண்டே இவற்றை கடந்து செல்லவேண்டியுள்ளது.

அதேபோல் எமது எதிர்காலத்தை பலப்படுத்த பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தே ஆகவேண்டும். எம்மை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் கூட இப்போது இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் நாமும் எமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தாக வேண்டும்.

ஆகவே எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது குறித்து மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்க முடியும். அடுத்து வருகின்ற நான்கு நாட்கள் கட்டுபாடுகளுடன் நிலைமைகளை கையாண்டால் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14