306 சிறைக்கைதிகள் நாளை விடுதலை : தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை என்கிறது அரசாங்கம்

Published By: J.G.Stephan

06 May, 2020 | 06:15 PM
image

(ஆர்.யசி)

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது பண்ணிப்பிற்கு அமைய 306 கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவரையும் விடுவிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.



வெசாக் தினமான நாளை கைதிகள் விடுதலையாகவுள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கும் வகையில் சிறைகளில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் 223 கைதிகளை விடுதலை செய்யவும் அதேபோல் விசேட கவனம் செலுத்தப்பட்டு சிறிய குற்றங்களில் ஈடுபட்டவர்களின்  83 பேரையும் விடுதலை செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளது. எனினும் இவர்களின் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட, போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட எவரும் விடுவிக்கப்படவில்லை.

போதைப்பொருள் கடத்தல்களை பாரிய அளவில் முன்னெடுக்கும் குற்றவாளிகள் சிலர் இப்போதும் சிறைச்சாலையில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு என்பது ஒருபோதும் வழங்கப்படாது.

அதுமட்டும் அல்ல இவ்வாறு நாட்டுக்குள் போதைப்பொருள்களை கொண்டுவரும் நபர்களை தடுக்கவும், நாட்டில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்தவும் இவ்வாறான குற்றவாளிகளுக்கு  தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இது குறித்து ஜனாதிபதியுடன் நாம் பேசி ஒரு தீர்மானம் எடுப்போம்.

கேள்வி:- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அண்மையின் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமரிடத்தில் வலியுறுத்தியுள்ளனர். அவ்வாறு எவரையும் விடுவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா?

பதில் :- அவ்வாறு எவரும் இல்லை, ஜனாதிபதி அவ்வாறு எந்த காரணிகள் குறித்தும் எமக்கு அறிவிக்கவும் இல்லை. இது பொதுவாக வெசாக் தினத்தில்  பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படும் நடவடிக்கையாகும். நீண்டகால தடுப்பில் குறிப்பாக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் குறித்து தீர்மானம் எடுக்க முடியாது. அவர்களை விடுதலை செய்வது ஜனாதிபதியின்  தீர்மானத்திற்கு அமைய இடம்பெறும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26