“அனர்த்தங்களின் போது புலிகள் கூட இராணுவத்திற்கு எதிராக அனர்த்த வேளைகளில் போர்தொடுத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவில்லை“

06 May, 2020 | 06:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இராணுவத்திற்கு எதிராக தாக்குதலை தொடுக்கவில்லை. அச் செயற்பாடு  ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை  சீர்  செய்ய அரசாங்கத்திற்கு அது ஒரு சாதகமான சூழலாக  காணப்பட்டது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சியினரது செயற்பாடு அவ்வாறு கிடையாது. நெருக்கடி நிலையிலும்  அரசியல் இலாபம் தேடிக்கொள்கின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களை எதிர்தரப்பினர் தொடர்ந்து கேள்விக்குற்படுத்தி்யதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் விடுதலை புலிகள் அமைப்பு  இராணுவத்திற்கு எதிராக தாக்குதலை முன்னெடுக்கவில்லை. அப்போதைய நெருக்கடி நிலையினை சமாளிக்க அவரவர் தரப்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தார்கள்.அச்சந்தர்ப்பத்தில் அது அரசாங்கத்துக்கு சாதகமாக அமைந்தது.

நெருக்கடி நிலையில். விடுதலை புலிகள் அமைப்பு செயட்பட்டவாறு தற்போதைய எதிர்க்கட்சியினர் செயற்படவில்லை. இவர்களது செயற்பாடுகள் சுயநல தேவைகளை அடிப்படை யாக கொண்டமைந்துள்ளன.

பொதுத்தேர்தலுக்கான  சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு தாக்கலில் இருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்ட வரை அரசாங்கம் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படவதாக எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. நீதிமன்றம் உரிய தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.

ஜூன் மாதம் 20 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராய சுகாதார துறையின் அதிகாரகளை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சுகாதார, பாதுகாப்பு தரப்பினரது ஆலோசனைக்கு அமையவே அரசாங்கம் செயற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58