தேர்தல் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு !

Published By: Vishnu

06 May, 2020 | 04:59 PM
image

(நா.தனுஜா)

பொதுத்தேர்தலை நடத்துவதாயின் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு அணுகுமுறைகள் தொடர்பான முழுமையான அறிக்கை இன்னமும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், முக்கிய அடிப்படை விடயங்களடங்கிய இடைக்கால அறிக்கை மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

சில ஊடகங்களினால் வெளியிடப்பட்ட செய்திகளை நோக்குகையில், பொதுத்தேர்தலை நடத்துவதாயின் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரப் பாதுகாப்பு அணுகுமுறைகள் தொடர்பான முழுமையான அறிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என்ற தவறான புரிதல் மக்கள் மத்தியில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது. 

சுகாதாரப் பாதுகாப்பு குறித்த அடிப்படை விடயங்களடங்கிய இடைக்கால அறிக்கையை மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இறுதி அறிக்கையில் உள்ளடக்குவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பில் இன்னமும் ஆராயப்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தப்படவுள்ள காலப்பகுதி, அப்போது காணப்படத்தக்க சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைக் கருத்திற்கொண்டே பரிந்துரைகளை முன்வைக்க முடியும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27