பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நேரத்தில் எவ்வாறு இடைக்கால அறிக்கை மஹிந்தவின் கையெழுத்துடன் நிறைவேறியது - ஜே.வி.பி. கேள்வி

Published By: Digital Desk 3

06 May, 2020 | 05:01 PM
image

(எம்.மனோசித்ரா)

இவ்வாண்டு மார்ச் - மே மாதம் வரையான காலப்பகுதிக்கு ஜனாதிபதியினால் இடைக்கால கணக்கறிக்கையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் ஆவணமொன்று பதிவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டது என்பதை அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 2020 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்காக அதாவது ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான காலத்திற்கான இடைக்கால கணக்கறிக்கையே நிறைவேற்றப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் அந்த கணக்கறிக்கையின் ஆயட் காலம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் மார்ச் 6 தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதிக்கு இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்து நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் கையெழுத்திடப்பட்ட போலி ஆவணம் நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தில் ஜனாதிபதியால் 1229 கோடி ரூபாவிற்கான இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மார்ச் மாதம் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவில்லை. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காது இவ்வாறு ஒரு இடைக்கால கணக்கறிக்கையை எவ்வாறு நிறைவேற்ற முடியும் ? அவ்வாறான அதிகாரம் யாருக்கும் கிடையாது. இதன் மூலம் அரசாங்கம் ஏகாதிபத்தியமாக அரச நிதியைச் செலவிட எத்தனித்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இந்த இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அத்தோடு திங்கட்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற நிதியுதவி பற்றி அமைச்சர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது பிரதமரின் பணிப்புரையின் கீழ் நிதி அமைச்சின் செயலாளர் அதற்கு பதிலளித்தார். இதன் போது ஒரு டொலரேனும் நாட்டுக்கு கிடைக்கப் பெறவில்லை என்று கூறப்பட்டது. இவ்வாறு அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41