கொரோனா தொடர்பான ட்ரம்பின் குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்க விஞ்ஞானி !

Published By: Vishnu

06 May, 2020 | 03:14 PM
image

கொரோனா வைரஸானது சீனாவிலுள்ள ஆய்வகமொன்றில் உருவாக்கப்பட்டது என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குற்றச்சாட்டை, அந் நாட்டின் சிறந்த விஞ்ஞானியான டாக்டர் அந்தோனி ஃபாசி மீண்டும் நிராகரித்துள்ளார்.

அத்துடன்  கொரோனா வைரஸ் ஒரு ஆய்வகத்தில் தோன்றியதாக நம்பவில்லை. வெளவால்களில் வைரஸின் பரிணாம வளர்ச்சியையும் இப்போது எவ்வாறு உள்ளது என்பதையும் வைரசையும்  நீங்கள் பார்த்தால், மிக, மிக வலுவாக இது செயற்கையாகவோ அல்லது வேண்டுமென்றே கையாளப்பட்டோ இருக்க முடியாது.

கொரோனா வைரஸ் காலப்போக்கில் படிப்படியான பரிணாம வளர்ச்சியை அடைந்து இயற்கையில் உருவாகி பின்னர் உயிரினங்களைத் தாக்கி உள்ளது என்பதை  இது வலுவாகக் குறிக்கிறது என்றும் அவர் அமெரிக்காவின் 'நெசனல் ஜோக்ரபி' சஞ்சிகைக்கு திங்கட்கிழமை அளித்த செவ்வியொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொரோனா வைரஸானது சீனாவின், வுஹான் நகரில் உள்ள ஆய்வகமொன்றில் உருவாக்கப்பட்டதாகவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அண்மையில் கூறியிருந்தார்.

எவ்வாறொனினும் அதற்கான ஆதாரங்களை இதுவரையில் வெளியிடவில்லை.

இதேவேளை சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளிப்பட்டதற்கு குறிப்பிடத்தக்க அளவு சான்றுகள் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 

எனினும் கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல எனவும், மரபணு மாற்றம் செய்யப்பட்தும் அல்ல என அமெரிக்க உளவு நிறுவனம் பின்னர் அறிவித்தது.

இந் நிலையிலேயே அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குனரும், சிறந்த விஞ்ஞானியான டாக்டர் அந்தோனி ஃபாசி இந்த கூற்றினை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Photo Credit : aljazeera

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10